நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22) மற்றும் நிவாஸ் நசீர் (20) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி...
குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து சேகரித்து அப்புறப்படுத்தினர். இந்த துப்புரவுப் பணி ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல்...
களியல்: நாளை 13-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நாளை (13-ம் தேதி) பத்மநாபபுரம், களியல் செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. கடையால், அருமனை பேரூராட்சிகள் மற்றும் வெள்ளாங்கோடு, மாங்கோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்...
நித்திரவிளை: கால்வாயில் கழிவு மனித கழிவு கொட்ட வந்த வாகனம்
குமரியில் உள்ள ஏவிஎம் கால்வாயில் இரவில் சமூக விரோதிகள் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. நேற்று இரவு இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில், கால்வாயில் மனிதக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்டு நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மீனவ கிராமங்களின்...
கருங்கல்: பஸ்ஸில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த கரோலின் ஆஸ்மி (30) தனது 8 மாத ஆண் குழந்தையுடன் நாகர்கோவிலில் இருந்து உதயமார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, சாந்தி (50) என்ற பெண் குழந்தையின் கையில் இருந்த 6 கிராம் தங்க பிரேஸ்லெட்டை பறித்துள்ளார்....
கிள்ளியூர்: தி மு க சார்பில் வாக்குச்சாவடி பரப்புரை
கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மத்திகோடு மற்றும் மிடாலம் ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரை நேற்று நடைபெற்றது. கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒன்றிய அவை தலைவர் பாலூர் தேவா,...
குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து தகராறு செய்தார். இதை தட்டிக் கேட்ட அண்ணன் மணிகண்டன், பிரபுராஜை கம்பியால் தாக்கியதில்...
நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், விஜயை முதலமைச்சராக வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட...
நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்....













