கருங்கல்: குமரி மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்
குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கருங்கலில் நேற்று ( 4-ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலா் த. மனோதங்கராஜ் எம். எல். ஏ. தலைமை வகித்தாா். துணை செயலா்கள் பாபு, டேவிட் ராஜபோஸ், அப்புக்குட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு...
நாகர்கோவிலில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி
குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் உத்தர வின்பேரில் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
இதில் தீவிபத்துகளை எப்படி தடுப்பது? பேரிடர் காலங்களில் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது? பிறரை...
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கும், குமரியில் இருந்து புனலூருக்கும் ரயில் சென்று வருகிறது. இந்த 2 ரயில்களும் டவுன் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே...
கிள்ளியூர்: பாசன கால்வாய் சீரமைப்பு; எம்எல்ஏ தொடக்கி வைப்பு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட சிற்றார் பட்டணங்கால் கிளை கால்வாய்கள் பல பகுதிகளில் தூர்வாரப்படாமல் பழுதடைந்து காணப்பட்டது. இந்த கால்வாய்களின் கரைகள் மற்றும் பக்க சுவர்களை சீரமைக்கவும் மதகுகளை நவீன முறையில் சீரமைத்து விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ...
குழித்துறை: செக் மோசடி வழக்கு; வாலிபருக்கு 1 ஆண்டு சிறை
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூரியன் என்பவர் மகன் ஷாஜி (47) இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஜஸ்டின் (46). இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் ஜஸ்டின் தனது நண்பர் ஷாஜியிடமிருந்து ரூ 4. 5 லட்சம் கடனாக...
கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை மற்றும் கடமலைக்குன்று வட்டார பேரவை இணைந்து நடத்திய போதை விழிப்புணவு பேரணி பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்திலிருந்து துவங்கி பூந்தோப்பு சி. எஸ். ஐ ஆலயம் வரை நடைபெற்றது. பேரணிக்கு பேரவை தலைவர். மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட்...
ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி அகண்ட தீப விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஒளியேற்றத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. காமாட்சி விளக்குகளுடன் கன்னிப் பெண்கள் தாமரை சக்கரத்திலும், அகல் விளக்குடன் ஆண் தெய்வ வேடமிட்ட சிறுவர்கள் முக்கோண சக்கரம் உட்பட பல்வேறு அம்சங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கருவறைக்குள் அகண்ட...
காந்தி சிலை சேதம்: நடவடிக்கை கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு கிராமம் காலனி பகுதியில், இரணியல் சர்வோதய வளாகத்தில் அமைந்திருந்த தேச தந்தை மகாத்மாகாந்தியின் திருவுருவ சிலையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டும், நடவடிக்கை எடுக்க விடாமல் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள்...
நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து குமரி கிழக்கு மாவட்ட கழக...
கோட்டாரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 70), ஆட்டோ டிரைவர். கடந்த சில மாதங்களாக அவர், உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நிலை சரியாக வில்லை. இதனால் மனமுடைந்த ஜேக்கப் நேற்று வீட்டில் தூக்கிட்டு...













