Google search engine

திருவட்டார்: தொழிலதிபருக்கு  கத்திக் குத்து வக்கீல் கைது

திருவட்டாறு அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் சஜி (31) பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தேமானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வக்கீல். சஜிக்கும் ராஜேஷுக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று (நவம்பர்...

குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இக்கூட்டத்தில், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி சந்திரசேகரன், அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள்,...

தக்கலை: கடைக்காரருக்கு வெட்டு; அண்ணன்-தம்பிக்கு 5 ஆண்டு சிறை

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதி பண்டாரவிளையை சேர்ந்தவர் ஆல்பன் என்ற கிறிஸ்துவர். பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-12-2010 அன்று பைக்கில் ஆல்பன்...

இரயுமன்துறை:  பாறாங்கல் பிரச்சனை; பேச்சுவார்த்தை தோல்வி

நித்திரவிளை அருகே இரயுமன்துறை தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளை பூத்துறை பகுதியில் சாலையில் கல் போட்டு ஊர் மக்கள் கடந்த நான்கு நாட்களாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.  இது சம்பந்தமாகவும், இரயுமன்துறை - தூத்தூர் எல்லையில் தாலுகா சர்வேயரால் போடப்பட்ட எல்லைக் கற்களை...

இரையுமன்துறை: கடலரிப்பு தடுப்புச் சுவர் பணி பாதிப்பு

தேங்காப்பட்டணம் அருகே இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாறாங்கற்கள் கடற்கரை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.  இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் லாரிகள் வரும்போது அதிகபயங்கரமான சத்தம் கேட்டு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர்பயத்தை...

நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (நவ.,11) மாலை சதீஷ்குமார் பழக்கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு மறைத்து...

நாகர்கோவிலில் காண்ட்ராக்டர் வெட்டப்பட்ட வழக்கில் பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காண்ட்ராக்டர் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டப்பட்டார். சம்பவம் தொடர்பாக, பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஈஸ்வரன்...

வன்னியூர்: குழந்தை இல்லாததால் ராணுவ வீரர் தற்கொலை

வன்னியூர் பகுதியை சார்ந்தவர் சுந்தரேசன் மகன் ஸ்டாலின் ஜோஸ் (40). இவர் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை.  இதனால் மன வருத்தத்தில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு...

அருமனை: சாலையில் கிடந்த 10 அடி நீள பாம்பு

அருமனை அருகே கடையல், ஆம்பாடி பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இந்த பகுதியில் அங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இன்று (நவம்பர் 12) காலை மலைப்பாம்பு ஒன்று சுருண்டுபடுத்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்கள் உடனடியாக களியல் வனத்துறைக்கு...

திருவட்டாறு: பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியாததால் பயணிகள் அவதி

திருவட்டாறில் பஸ் ஸ்டாண்ட் ரூ. 2.55 கோடி செலவில் கட்டும் பணி 2023 பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை.  இதனால் பஸ் ஏறச்செல்லும் மக்கள் ரோட்டின் இரு பகுதியிலும் நெருக்கடியான நிலையில் பஸ்களுக்கு காத்துநிற்கின்றனர். எந்த வித...