குமரி: பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் இன்று காலை துவங்கியது
குமரி மாவட்ட பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு, 12 சிவ ஆலயங்களை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம், காவி வேட்டி துண்டு அணிந்து கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் பாரம்பரிய முறை நடைபெற்று வருகிறது. நாளை சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7 நாட்கள் விரதமிருந்த சிவ...
மார்த்தாண்டம்: மீன் கழிவு லாரிக்கு ரூ 25 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மார்த்தாண்டம், சிராயன்குழி பகுதியில் துர்நாற்றம் வீசிய லாரியை பொதுமக்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரியை...
புதுக்கடை: 2 யூனிட் சல்லி பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் முஞ்சிறை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டதில், 2 யூனிட் சல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 6 ஆயிரம் ரூபாய்...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தப்பியோட முயன்ற சுயம்புலிங்க அபினேஷ் (20) என்பவரை பிடித்தனர். அவரிடம் 20 கிராம்...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடலை...
குமரி: விபத்தில் சிக்கியவரை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு
அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) என்ற தொழிலாளி, விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு...
மார்த்தாண்டம்: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (79) தனது மனைவி ஓமனா (74) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். 52 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...
குழித்துறை: மேம்பாலம் கீழ்பகுதியில் மின்விளக்குகள் அமைத்தல்
குழித்துறை - மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விளக்குகள் எரியாமல் இருட்டாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் 120 மின் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி...
குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், அவரிடம் சிலர் தகராறு செய்தபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்...
குமரி: பெண்ணை உறவுக்கு அழைத்து ரகளை; சைக்கோ கைது
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது வெளியே வந்த நிலையில், நேற்று 24 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து ஆடையை...













