Google search engine

மண்டைக்காடு: கோயில் பகுதிகளில் உணவுத்துறை ஆய்வு

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் உத்தரவுப்படி குளச்சல் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அகஸ்தீஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் ஆகியோர் திருவிழாக் கடைகள் மற்றும்...

இரணியல்: அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

இரணியல் அருகே சுங்கான்கடை  பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இதில் இரண்டாவது மகன் ஸ்பர்ஜன் (24) என்பவர்...

ஆற்றூர்: போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர் – வழக்கு

ஆற்றூர் பேரூராட்சி, தேமனூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சிவன் என்ற செல்வன் (38). இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார். இவர் பேரூராட்சியில் திட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் வீடு கட்டுவதற்காக தனியார்...

மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய 4 பேர்  மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே நல்லூர் பி கிராமம் மலையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேற்று குறிப்பிட்ட  இடத்தில் சென்று பார்த்தபோது, அங்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் செம்மண் வெட்டி எடுத்து டெம்போவில் கடத்திக் கொண்டு...

கிள்ளியூர்: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்த ராஜேஷ் குமார் MLA

நேற்று முன்தினம் சென்னை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் வரவேற்றதோடு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து...

விரிவிளை: கோயில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

நித்திரவிளை அருகே விரிவிளை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த கடை மேற்கு கடற்கரை சாலையில் இருந்ததால் நீதிமன்ற உத்தரன்படி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ( 2017-ல்)  மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை இருந்த பகுதியிலிருந்து பத்து மீட்டர் தொலைவில் ஜெகதாம்பிகை கோயில்...

நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பிற்கு ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.  கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான அய்யா...

குளச்சல்: பைக் மோதி நடந்து சென்ற முதியவர் பலி

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (75). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். இவர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் (மார்ச் 2) மாலை கோயிலுக்கு செல்வதற்காக குளச்சலில் இருந்து நடந்து சென்று...

புதுக்கடை: தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலனின்றி உயிரிழப்பு

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி மனநிலை பாதிப்பு காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.  மகன் சிஜோ என்பவருடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோவுக்கு திருமணமாகவில்லை....

நாகர்கோவில்: புகையிலைப் பொருள் வைத்திருந்தவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஒழுகினசேரி பகுதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அழகுத்துரை (42) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த...