கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். மற்ற மொழிகளில் வைத்தால், தமிழ் எழுத்துக்களை விட சிறியதாக இருக்கும் படி வைத்தல் அவசியம். அரசு அறிவித்தபடி பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும். இது ஏப். 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.