மண்டைக்காடு கோயில் திருவிழா; கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த தலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,...
பேச்சிப்பறை: மலை கிராமங்களில் இரவில் சூறைக்காற்று
பேச்சிப்பாறை அணைப்பகுதியை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. நேற்று இரவு திடீரென சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. இந்த காற்றுக்கு வீடுகளும்...
தக்கலை: 10- ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 27) காதலன் மாணவியைச் சந்திக்க அவரது வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனை அப்பகுதி இளைஞர்கள் கண்டித்து காதலனைத் துரத்தி...
கிள்ளியூர்: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
கிள்ளியூர் அருகே தொலையாவட்டம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப் போவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள், காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். மேலும் அரசு மதுபான கடை திறப்பதாக...
பேச்சிப்பாறை: மார்ச் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க மனு
கிள்ளியூர், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் திக்கணங்கோடு கால்வாய், சிற்றாறு பட்டணங்கால்வாய் உள்ளது. இங்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடவும், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் மார்ச் 20-ம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கேட்டு நேற்று 27-ம் தேதி...
கன்னியாகுமரி: கனமழை பெய்ய வாய்ப்பு.. மக்களே எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (பிப்ரவரி 28) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது...
நாகர்கோவில் போக்குவரத்து பணிமனையில் புகுந்த மரநாய்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்து பணிமனையில் நேற்று மரநாய் ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மர நாயை பத்திரமாக மீட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வில்லுக்குறி: அரசின் அனைத்து துறை புகைப்படக்கண்காட்சி
வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று 26-ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை...
வெள்ளிச்சந்தை: வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்
வெள்ளிச்சந்தை அருகே ஆசாரி விளை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செல்வகனி (58). இவர் மேலச்சங்கரன் குழி பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் மனைவி நிதியா. செல்வகனி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கிய தொடர்பாக...
இரணியல்: நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி காயம்
சுங்கான்கடை, ஐக்கியபுரம் பகுதி சேர்ந்தவர் ஏசுபாதம் (54). இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இவர் பேயன்குழியில் உள்ள ஒரு துணி கடையில் டைலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு சுங்கான்கடையில் பஸ்ஸில் வந்து இறங்கினார்....












