Google search engine

வெள்ளிச்சந்தை: பள்ளி பஸ் – பைக் மோதல்; 2 வாலிபர்கள் பலி

வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த அஷ்ரத் அலி (21) மற்றும் அஜேஷ் (21) ஆகியோர், சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பும்போது, வெள்ளமோடி சந்திப்பு பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று மோதியதில் உயிரிழந்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு குமரி அரசு...

திருவட்டாறு: தாலுகா நீதிமன்ற அமைக்க அமைச்சரிடம் மனு

திருவட்டாறு தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கோரிக்கை குழுவினர், அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்றம் அமைக்க...

குமரி: காரில் வந்த மருமகளை தாக்கிய மாமனார் – வீடியோ வைரல்

மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பிரிந்து வாழும் தனது மருமகள் ஷைலாஜாவை காரில் வழிமறித்துத் தாக்கி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார்...

திற்பரப்பு: கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று ஒதுங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் மற்றொரு முதலை தென்பட்டது. அப்பகுதி வழியாக சென்ற சிறுவர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்....

கன்னியாகுமரி: தவெக மீது காதல்.. திமுகவுடன் கல்யாணம் – நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் தேவை என்றும், அதை நிறைவேற்ற வந்தவர்கள் தோற்றுவிட்டதாகவும் கூறினார். விஜய்யின் வருகை இந்திய அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், ஆனால் திமுகவை...

குளச்சல்: மினி பஸ் – கார் மோதல்.. 7 பேர் காயம்

குளச்சலிலிருந்து குறும்பனை நோக்கிச் சென்ற மினி பஸ், குளச்சல் பீச் சந்திப்பில் எதிரே வந்த கார் மோதியதில் பஸ்ஸில் இருந்த சிறுமி மற்றும் காரில் இருந்த வினிஸ்டன், அவரது மனைவி உட்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணி என்பவர் மட்டும் உள்நோயாளியாக...

அருமனை: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

அருமனை பகுதியை சேர்ந்த 52 வயது கூலித் தொழிலாளி ராபி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் ஹாலில் படுத்திருந்த ராபி, மனைவி மற்றொரு அறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார்....

குமரி: வனத்துறை அலுவலர் வீட்டில் திருடிய பெண் கைது

மார்த்தாண்டம், வடக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் செல்லதுரை சாமுவேல் (73) என்பவரின் வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டு வேலைக்காரியான கருங்கல் பகுதியைச் சேர்ந்த பிரேமா (40) நகைகளைத் திருடியது...

கருங்கல்: வெனிசுலா அதிபர் கைது ; மார்க்சிஸ்ட் போராட்டம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த அமெரிக்காவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து, நேற்று கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு...

நாகர்கோவில் அருகே மது விற்றவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடசேரி சப்–இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியின்போது, காந்தி பூங்கா அருகே மது விற்ற புளியவிளை பகுதியைச் சேர்ந்த சிவன் (37) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.