மார்த்தாண்டம்: நகராட்சிப் பணியாளருக்கு கத்திக்குத்து

குழித்துறை நகராட்சியில் பிளம்பிங் ஊழியராகப் பணிபுரியும் பிரகாஷ் (29) என்பவர், சென்னித்தோட்டம் அரசு மது பார் அருகே பைக்கை நிறுத்த முயன்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகுமாரை கைது...

ஹாக்கர்புரம்: மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, கல்வி உதவித்தொகை வழங்கல்

கேரள முதலி சிஎஸ்ஐ முன்னேற்ற சங்கத்தின் 34வது ஆண்டு விழா ஹாக்கர்புரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜான் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், போதகர் எஸ் வி உதய நிர்மல் சிங் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் டாக்டர் குணசீன் வேதநாயகம்...

நாகர்கோவில்: காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சுசீந்திரம் மெயின் சாலையில் நேற்று மாலை பலத்த காற்றில் தென்னை மரம் முறிந்து வாகை மரக்கிளையில் விழுந்தது. இதனால் இரு மரங்களும் நடுச்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகம்

நாகர்கோவில் மாநகராட்சி 17, 21வது வார்டுக்கு கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி, குழித்துறை நகராட்சி வார்டு 3, 4, 5, 6 விஎல்சி ஆடிட்டோரியம், அழகப்பபுரம் பேரூராட்சிக்கு காமராஜர் திருமண மண்டபம், செறுகோல் ஊராட்சிக்கு ஆர்சி சமூக நலக்கூடம், கல்குறிச்சி ஊராட்சிக்கு கொல்லன் விளை அரசு நடுநிலைப்பள்ளி, மெதுவமல் ஊராட்சிக்கு...

இரணியல்: அம்மன் கோயிலை உடைத்து நகை, பணம் திருட்டு

இரணியல் அருகே சுனைப்பாறை மலை மீதுள்ள பத்ரகாளி அம்மன் மாடன் கோயிலில் இன்று காலை பூசாரி சரவணன் கோயில் நடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயில் நிர்வாகி ராமசாமி வந்து பார்த்தபோது, சுமார் 2 கிராம் தங்க தாலி மற்றும் உண்டியல் காணிக்கை...

குளச்சல்: விசைப் படகில் கணவாய் மீன்கள் குவிந்தது

குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கரை திரும்பிய 20 விசைப்படகுகளில் கணவாய், தோட்டு கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. கேரளாவில் ஓண பண்டிகை காரணமாக வியாபாரிகள் அதிக அளவில் மீன்களை...

பூதப்பாண்டி: பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு

பூதப்பாண்டி வனச்சரகம் சார்பில், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில், பறவைகள் சரணாலயத்தில் நேற்று மெகா பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் அன்பழகன், சமூக வனச்சர அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது....

மார்த்தாண்டன்துறை: கணவனை தாக்கியதாக மனைவி மீது வழக்கு

மார்த்தாண்டன்துறை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி வின்சென்ட் (38) என்பவரை, அவரது மனைவி ராஜி மற்றும் அவரது அக்கா மகன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜி மற்றும் சாம்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே...

விளவங்கோடு: பெண் – ஆண் எம்எல்ஏ-கள் வடம் இழுத்தல் போட்டி

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணக்கொண்டாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் பெண் அணியினர், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையிலான ஆண்கள் அணியினரை வடம் இழுத்தல் போட்டியில் தோற்கடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, சிறு குழந்தைகளுக்கு அறுசுவை உணவை...

கொல்லங்கோடு:   மனைவியை தாக்கியதாக கணவன் மீது வழக்கு

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (45) என்பவர், குடித்துவிட்டு வந்து தனது மனைவி ஜினியை (41) தாக்கியதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், கடந்த 31ஆம் தேதி இரவு மீண்டும் போதையில் பிரேம்குமார்...