Google search engine
மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கடந்த 1799-ம் ஆண்டு நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். இந்த போரில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஆங்கிலேயர்களிடம் சிக்கியது. ஸ்ரீரங்கப்பட்டிணம் போரில் ஆங்கிலேய படையின் கேப்டனாக செயல்பட்ட ஜேம்ஸ் ஆண்ட்ரு டிக்என்பவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் திப்பு சுல்தானின் வாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாளில் புலியின் வரி மற்றும் அரபு மொழியின் ‘ஹா’ என்ற...
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி வீ ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம் ஒரு சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஓராண்டு முதல் 4 ஆண்டு கால அளவைக்கொண்டதாக இருக்கும். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப்பின் ஆட்சியைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த சொகுசுக்கப்பல் சுற்றுலாத் திட்டம் இருக்கும் என்று அந்த...
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 165 ஏவுகணைகளை வீசினர். இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் அழித்தது. சில ஏவுகணைகள் இஸ்ரேலின் பினா நகரில் விழுந்தன. இதில் 7 பேர்...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று கண்டித்துள்ளது. அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அவர் உலகத்...
அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது 41,330 ஆக, அதாவது 855 சதவீதம் (எட்டைரை மடங்குக்கு மேல்) உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள்...
அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில்...
பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது...
‘‘கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வெளிநாட்டு தீவிரவாதி. போலி ஆவணங்கள் மூலம் அவர் எப்படியோ கனடா குடியுரிமை பெற்றுள்ளார்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மேக்சிம் பெர்னியர் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அத்துடன் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி,...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம். நான் அதிபராக இருந்தபோது ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு எப்போதும் பணநெருக்கடி இருந்தது. இதனால், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனது முதல்...