Google search engine
அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது பிரச்சார குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எல்லாம் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அரசு திறன் துறை உருவாக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இத்துறைக்கு பிரபல...
இலங்கை நாடாளுமன்ற தேர் தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி...
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும். இப்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் புதிய அணியின் கொள்கைகளே இதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயம் இது நடக்கும்....
பிரபலமாக இருந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தி ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விஷயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். 2022-ல் ‘எக்ஸ்’ தளத்தின் சிஇஓவாகப் பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தது என தனது இஷ்டப்படி மாற்றங்களைச் செய்து வருகிறார் மஸ்க். இதனால் பலரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானலும் அவர் தனது நடவடிக்கைகளை...
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், நியூயார்க்கில் ஐ.நாவுக்கான ஈரான் தூதரை, ட்ரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநரான எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்துள்ளதாகவும், அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக மகுடம் சூட உள்ளார். இச்சூழலில்,...
கனடாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரி போராடிய காலிஸ்தான் தீவிரவாதிகளில் பலர் கனடாவில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவின் டொரன்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் அண்மையில்...
நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். வைதாங்கி ஒப்பந்தம் -...
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளதற்குப் பிறகு தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற மிக முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டம் இதுவாகும். இந்து அமெரிக்க அறக்கட்டளை, அமெரிக்க சீக்கிய அமைப்புகள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன், வாழும் கலை உள்ளிட்ட பல இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்கு...
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை தேர்வு செய்துள்ளார். இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை, பொதுச் சுகாதாரம், மனித சேவைகள், மருந்து, உணவுப் பாதுகாப்பு, மருத்துவ ஆய்வு, தடுப்பூசிகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான செயலராக ட்ரம்ப் அறிவித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கென்னடி நியமனம் குறித்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூகவலைதளத்தில்,...
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை...