சீன ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார்: அமெரிக்க பத்திரிகையில் தகவல்
admin - 0
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து கரோனா வைரஸ் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில் சீனாவின் வூகான் நகரிலுள்ள ஆய்வகச் சோதனையின்போது கரோனா வைரஸ் கசிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இதை...
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாடு எச்சரித்துள்ளது.
1990-ல் சோவியத் யூனியன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை. இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் காலத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளதாக ரஷ்யாவின் ஆயுத கட்டுப்பாட்டு...
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
கூடுதலாக 41 நாட்கள்.. ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய...
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட...
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவலைப்...
ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஆபத்தான உறவை பிரான்ஸ் நாட்டின் ஒரு பருவ இதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
பிாரன்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து 'லே ஸ்பெக்டகிள் டு மாண்டே' என்ற பிரெஞ்சு பருவ இதழ் வெளியாகிறது. இதில் பாகிஸ்தானில் ஜேஇஎம்-மின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு இருந்தபோதிலும் அந்நாடு தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதை அந்தக் கட்டுரை...
ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா (77) தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனால் ஹசீனா அரசு...
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேற்கு ஆசியாவில் குவைத் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகை 43 லட்சம் ஆகும். இதில் இந்திய வம்சாவளியினர் சுமார் 10 லட்சம் ஆகும். அதோடு சுமார் 9 லட்சம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய...
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதைத் தடுக்கும் இஸ்ரேல் – ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை
admin - 0
அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான...










