உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம்.
சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான...
ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை.
பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு...
வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக...
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார்....
‘அதிகார வரம்பை மீறுகிறீர்கள் ட்ரம்ப்’ – இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம் சாடல்
admin - 0
டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகையில், “அமெரிக்காவில் இருந்து...
ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மை தான் இந்த வரிசைப் படங்களின் முக்கிய கதாபாத்திரம். உலகம் முழுவதும் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமாகிவிட்ட இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள...
அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம்...
இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளை தவிர்த்தால், பள்ளிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறினால் உங்களின் ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்காலத்தில்...
“புதினுக்கு என்ன ஆச்சு?” – தேவையின்றி பலரை கொல்வதாக ட்ரம்ப் காட்டம் | ரஷ்யா – உக்ரைன் போர்
admin - 0
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ரஷ்யாவின் புதின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார்....










