Google search engine
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அவரின் தடுமாற்றமான பிரச்சாரம் காரணமாக, போட்டியில் இருந்து அவர் வெளியேறுவது குறித்து பைடனின் குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊகமான வேட்பாளராக இருப்பேன் என்று பைடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும், போட்டியில் இருந்து விலகும் உத்தியை துல்லியமாக சரியான நேரத்தில் செயல்படுத்தலாம் என்று அவரது குடும்பத்தினர் யோசித்து வருவதாக இதுகுறித்து விபரம்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று அறிவித்துது. இது குறித்து வெள்ளைமாளிகை செயலாளர் கரைன்ஜேன் பெரிவிடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல்பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் நேற்று பங்கேற்றார். அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவருக்கு லோசான அறிகுறிகள் உள்ளன. அவரது சுவாசம் இயல்பு நிலையில் உள்ளது....
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. “டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ-183 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தூக்கு (UNKL) திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்....
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராகப் பதிவானது என்று ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில்...
“என் பக்கம் கடவுள் இருந்தார்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னரான முதல் உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார்...
மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன், “என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் ட்ரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஒரு உண்மையான அமெரிக்கர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. காதில் காயத்துடன் தப்பித்த அவர், அதன் பிறகு முதல்முறையாக மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில்...
கடந்த ஜூலை 15-ம் தேதி (திங்கள்) இரவு, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியாமுஸ்லிம்களுக்கான இமாம் அலிமசூதி அருகில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு துப்பாக்கி சூடுநடத்தியது. இதில் ஒரு இந்தியர், நான்கு பாகிஸ்தானியர்கள், காவல்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின்போது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு...
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல். இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து...
கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தாமஸ் மேத்யூ என்பவர் ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார், சுதாரித்துக் கொண்டபாதுகாப்புப் படை வீரர்கள்,...
அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள்...