அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில்...
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு
பிரதமர் மோடியுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தினார்.
இஸ்ரேல் - காசா அமைதி திட்டம் குறித்து 20 அம்ச கொள்கை...
ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காவதாக இலக்கியத்துக்கான நோபல்...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர்...
அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர்...
இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேபோரா...
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள...
மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல்...
இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?
அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து...
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது....