10 ஆண்டில் புற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் கணிப்பு

0
21

செயற்கை நுண்​ணறி​வின் (ஏஐ) உதவியால் இன்​னும் 10 ஆண்​டுகளில் புற்றுநோய் முற்​றி​லுமாக ஒழிக்​கப்​படும் என்று ஆந்த்​ரோபிக் ஏஐ நிறு​வன தலை​மைச் செயல் அதி​காரி (சிஇஓ) டாரியோ அமோடெய் நம்​பிக்கை தெரிவித்​துள்​ளார்.

இது​குறித்து டாரியோ அமோடெய் கூறியுள்​ள​தாவது: சமீப காலத்தில் ஏஐ தொடர்​பான தொழில்​நுட்​பம் அபார வளர்ச்​சி​ பெற்றுள்​ளது. நாம் ஏஐ தொழில்​நுட்​பத்​தைச் சரியாகப் பயன்​படுத்​தினால், மனிதகுலம் ஆயிரக்​கணக்​கான ஆண்​டுகளாக் தீர்க்க முடி​யாமல் தவிக்​கும் மருத்​து​வச் சவால்​களுக்​குத் தீர்வு காணும் ஒரு விந்தை யுகத்​தைப் படைக்க முடியும். அதன் விளைவாக, அடுத்த 10 ஆண்​டுகளுக்​குள் புற்​றுநோய், அல்​சைமர், இதய நோய்​கள் மற்​றும் மனநலப் பிரச்​சினைகள் போன்​றவை முற்​றி​லும் ஒழிக்​கப்​பட்டு அவை கடந்​தகால எச்​சங்​களாக மாறிவிடும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இவரைப் போலவே எலான் மஸ்க் மற்​றும் கூகுள் டீப்​மைண்ட் தலை​வர் டெமிஸ் ஹாசாபிஸ் போன்ற முன்​னணி தொழில்​நுட்​பத் தலை​வர்​களும், ஏஐ மூலம் சில வாரங்​களி​லேயே புதிய மருந்துகளைக் கண்​டறிந்து நோய்​களை முறியடிக்க முடியும் என தொடர்ந்து கூறி வரு​கின்​றனர்.

மருந்து நிறு​வனங்​கள் சர்ச்சை

ஏஐ தொழில்​நுட்ப நிறு​வனத் தலை​வர்​கள் இத்​தகைய நம்பிக்கையான வாக்​குறுதி​களை அளித்​தா​லும், நிஜத்​தில் மருந்துகளைத் தயாரிக்​கும் அறி​விய​லா​ளர்​களும் மருந்து உற்பத்தி நிறு​வனங்​களின் தலை​வர்​களும் இக்​கருத்தை அப்படியே ஏற்​றுக்​கொள்ள மறுப்​பது தற்​போது சர்ச்​சையாகி உள்ளது.

வெர்​டெக்ஸ் பார்​மாசூட்​டிகல்ஸ் தலை​வ​ர் ஜெஃப் லைடன் கூறும்போது, “சுமார் 10,000 மருந்​துச் சேர்​மங்​களை ஆய்வு செய்து புதிய மருந்​தைக் கண்​டு​பி​டிக்க 50 ஏஐ நிறு​வனங்​களின் உதவி நாடப்​பட்​டது.

ஆனால், அதில் ஒரே ஒரு ஏஐ நிறு​வனம் கூட தானாகச் செயல்​பட்​டுப் பயன்​படுத்​தக்​கூடிய ஒரு மருந்​தைக் கூட உரு​வாக்​கித் தர​வில்லை. எனவே ஏஐ தொழில்​நுட்​பம் 10 ஆண்டுகளில் நோய்​களைக் குணப்​படுத்​தி​விடும் என்ற கூற்று முற்​றி​லும் சாத்​தி​யமற்​றது” என்​றார்.

1970-களில் அறி​விக்​கப்​பட்ட ‘புற்​றுநோய்க்கு எதிரான போர்’ திட்டம் பல தசாப்​தங்​களாக நீடித்த வரலாற்​றைச் சுட்​டிக்​காட்​டும் நிபுணர்​கள், நடைமுறைச் சாத்​தி​யக்​கூறுகளைத் தாண்டி அளவுக்கு அதி​க​மான எதிர்​பார்ப்​பு​களைப் பொது​மக்​களிடம் விதைப்​பது சரியல்ல என எச்​சரிக்​கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here