மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்! – அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

0
28
கனமழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கனமழை மற்றும் மண்சரிவு அபாயம் நிலவுவதால், மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகங்களின் அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளன. அதேபோல, கொடைக்கானலிலும் கனமழை, மண் சரிவு அபாயம் கருதி முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீா்நிலைகள், அணைகள், கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், நீா்நிலைகள், அணைகளில் குளிப்பதையும், அவற்றின் அருகே செல்வதையும் தவிா்க்க வேண்டும்.

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முன் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்புகளைச் சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிா்ப்பதுடன், வானிலை ஆய்வு மையம், பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிடும் எச்சரிக்கைகளைத் தொடா்ந்து கவனிக்க வேண்டும்.

கனமழைக் காலத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து அரசு, மாவட்ட நிா்வாகங்கள் வழங்கும் அறிவுறுத்தல், வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here