பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மோதல்: 1,000 பேரை கைது செய்த போலீஸார்

0
9

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் சனிக்கிழமை (அக்.24) அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 1,000 பேர் கைதாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை, வாழ்க்கை செலவினம், கல்வித்துறையில் நிலவும் மோசமான சூழலை கண்டித்து மக்கள் வென்குண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் பொருளாதார நெருக்கடி சூழலை கண்டித்து சுமார் 4 லட்சம் மக்கள், அரசுக்கு எதிராக பேரணி மேற்கொண்டனர். இதில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1,10,000 பேர் பங்கேற்றனர். இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 70,000 பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற பேரணி, வன்முறையாக வெடித்த காரணத்தால் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. சில வணிக நிறுவனங்களில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டன. அதை கருத்தில் கொண்டு போலீஸார் தங்கள் பணியில் தீவிரம் காட்டினர்.

அதிக நிதி ஒதுக்கக் கோரும் போராட்டக்காரர்கள்

போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர், தீவிர இடதுசாரி ஆதரவாளர்கள் ஆகியோர் பொது சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.

கல்வித்துறையில் கூடுதல் நிதி, அதிகரித்து வரும் செலவினத்துக்கு நிவாரணம், வீட்டு வாடகையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசு சில தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இருப்பினும் அது பலன் தரவில்லை. இந்த போராட்டம் அதிபர் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு இது தலைவலியாக அமைந்துள்ளது.

1,000 பேர் கைது

போராட்டத்தின் போது தீவிர இடதுசாரி ஆதரவாளர்கள், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சிலர் முகமூடி அணிந்து போராடியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வகை வன்முறையில் ஈடுபட்டவர்களில் சுமார் 1,000 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், போலீஸார் உடன் மோதலில் ஈடுபட்ட கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. அதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் சிலவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பிரான்ஸ் உள்நாட்டு போராட்டம் காரணமாக அங்கு சுற்றுலா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளதாக தகவல். அவர்களது அறிவிப்பு பிரான்ஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here