என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ராஜினாமா – துணைத் தலைவர் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பில் இருந்ததாக தகவல்

0
28

என்விடியா நிறு​வனத்​தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அமெரிக்க உளவுத் துறை​யால் சீன உளவாளியாக சந்​தேகிக்​கப்​படும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு ரகசிய தொடர்பு இருந்​ததை அண்​மையில் ஒப்​புக் கொண்டார்.

இந்நிலை​யில், அவருக்கு என்​வி​டியா துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வரும் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பு இருப்​பது தற்போது தெரிய​வந்​துள்​ளது. இது​குறித்த கட்​டுரை நியூயார்க் டைம்ஸ் பத்​தி​ரி​கை​யில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி​யுள்​ளது.

கடந்த மார்ச் மாதம் கலிபோர்​னியாவின் சான் ஜோஸ் நகரில் என்​வி​டி​யாவின் வருடாந்​திர தொழில்​நுட்ப மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அரு​கிலுள்ள ஹோட்​டல் ஒன்​றில் நிர்​வாகி​கள் ஆலோசனை நடத்​திக் கொண்​டிருந்​த​போது, திரு​மண​மானவ​ரான கிம்​பர்லி பாவலும் ஜென்​சென் ஹுவாங்​கும் நெருக்​க​மாக இருந்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

இதனை அங்​கிருந்த ஒரு​வர் தனது செல்​போனில் வீடியோ எடுத்துள்​ளார். இதனைக் கவனித்த ஹுவாங்​கின் தனிப்​பட்ட பாது​காப்​புப் பணி​யாளர்​கள், அந்த நபரைத் தனியே அழைத்​துச் சென்று, தாங்​கள் பார்த்த சம்​பவம் குறித்து வெளி​யில் எங்​கும் கூறக்​கூடாது என நிபந்​தனை விதித்து ரகசி​யக் காப்பு ஒப்​பந்தத்தில் கையெழுத்​துப் பெற்​றதாக அந்த செய்​தி​யில் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்​துக் கருத்து தெரி​விக்க ஜென்​சென் ஹுவாங், கிம்​பர்லி பாவல் மற்​றும் என்​வி​டியா நிறுவனம் மறுத்​து​விட்​டன.

யார் இந்த கிம்​பர்லி பாவல்?

48 வய​தான கிம்​பர்லி பாவல், 2008-ம் ஆண்டு முதல் என்​வி​டியா நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். 2017-ம் ஆண்டு முதல் நிறுவனத்​தின் சுகாதா​ரத் துறை துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வரும் இவர், மருத்​துவ இமேஜிங் மற்​றும் மருந்து கண்டுபிடிப்​புக்​கான ஏஐ தொழில்​நுட்​பப் பிரிவு​களை நிர்​வகித்து வரு​கிறார்.

இந்த சர்ச்​சைக்கு மத்​தி​யில் என்​வி​டியா நிறுவனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி ஜென்​சென் ஹுவாங் பதவி வில​கினார்.

இதையடுத்து, என்​வி​டி​யாவின் நிர்​வாக துணைத் தலை​வரும் தலைமை நிதி அதி​காரியுமான கோலெட் கிரெஸ், இடைக்​கால தலைமை நிர்​வாக அதி​காரியாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் தலைமை நிதி அதி​காரி பொறுப்​பைத் தொடர்ந்து வகிப்​பதோடு, நிறு​வனத்​தையும் வழி நடத்​து​வார் என்று என்​வி​டியா தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here