3 நாள் அரசு முறை பயண​மாக அமெரிக்கா சென்​றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

0
24

 சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்​றுள்​ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த மே மாதம் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவருக்கு சிறப்​பான வரவேற்பு வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், பத்​தாண்​டு​களுக்​கும் மேலான இடைவெளிக்​குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்​பிங் 3 நாள் பயண​மாக அமெரிக்கா சென்​றுள்​ளார்.

தனி விமானம் மூலம் வாஷிங்​டன் அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்​ரூஸ் விமானப்​படைத் தளத்​துக்கு நேற்று வருகை தந்த ஜி ஜின்​பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்​றார்.

வெளி​நாட்டு தலை​வர்​கள் வெள்ளை மாளி​கைக்கு வந்த பின்​னர் அவர்​களை வரவேற்​பது​தான் ட்ரம்​பின் வழக்​க​மான நடை​முறை. இதற்கு மாறாக, ஜி ஜின்​பிங்​கின் விமானம் தரை​யிறங்​கும் இடத்துக்கே ட்ரம்ப் சென்று வரவேற்​றது அரி​தான நிகழ்​வாகக் கருதப்​படு​கிறது.

இன்று வெள்ளை மாளி​கை​யில் ஜி ஜின்​பிங்​குக்கு அரசு முறை விருந்து அளிக்​கப்​படு​கிறது. மேலும், பல அரசு முறை நிகழ்ச்​சிகள் நடை​பெறும். இதில் வரவேற்பு நிகழ்ச்சி மற்​றும் ராணுவ வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை பார்​வை​யிடு​தல் ஆகியவை இடம்​பெறும்.

பின்​னர் நடை​பெறும் கருப்பு உடை விருந்​தில் என்​விடியா நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி ஜென்​சன் ஹுவாங், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் எலான் மஸ்க் உள்​ளிட்ட தலைவர்கள் பங்​கேற்க உள்​ளனர். அதற்கு முன்​பாக, ட்ரம்ப்​பும், ஜி ஜின்​பிங்​கும் வர்த்​தகம் உள்​ளிட்ட முக்​கிய விவ​காரங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர்.

நாளை ஜி ஜின்​பிங்​கும், அவரது மனைவி பெங் லியு​வானும் வெள்ளை மாளி​கைக்கு மீண்​டும் சென்று ட்ரம்ப் மற்​றும் முதல் பெண்​மணி மெலானியா ட்ரம்ப்​புடன் தேநீர் விருந்​தில் பங்கேற்கின்​றனர்.

பின்​னர், வாஷிங்​டனில் உள்ள தேசிய ஆவணக் காப்​பகத்​துக்​கும் அவர்​கள் செல்​கின்​றனர். இரு நாடு​களுக்கு இடையே​யான உறவை எடுத்​துக்​காட்​டும் வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஆவணங்களை அவர்​கள் பார்​வை​யிட உள்​ள​தாக வெள்ளை மாளிகை தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here