தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த பொன்னேசம் (70) என்பவரின் மகன் ஞானசேகர் (42) மற்றும் அவரது மனைவி ஆஷா இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஆஷா தனது தாய் வீட்டில் புகார் அளித்தார். இதன் பேரில், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஞானசேகரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியது. அப்போது, சண்டையை விலக்க முயன்ற பொன்னேசம் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து மூதாட்டி கணவர் ராமையன் அளித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














