Home 2024
Yearly Archives: 2024
தமிழக பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது: நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்
நெருக்கடியான சூழல்கள் இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் ஆரோக்கியமாகவே உள்ளது என்று நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணவீக்கத்தைப் பொறுத்த வரை தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார வளர்ச்சி போன்று பணவீக்கமும் முக்கியம். பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளைப் பொறுத்தவரை, 2024-25-ம் ஆண்டில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயம்
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும்...
கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 20 இடங்கள் கிடைக்கும்: முதல்வர் சித்தராமையா நம்பிக்கை
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும் என மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூருவில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச அரிசி, இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களையும் விரைவில் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக கர்நாடகாவின்...
நாகர்கோவில் காசி மீதான மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.
காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து...
மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களை மீட்ட விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.
மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள்...
நாடகப் பின்னணியில் உருவான ‘கதாநாயகி’
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று ‘கதாநாயகி’. ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ்.அங்கமுத்து, ஏ.கருணாநிதி, எஸ்.ராமாராவ் உட்பட பலர் நடித்தனர்.
திரைக்கதை, வசனத்தை டி.கே.கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா, கண்ணதாசன் பாடல்கள் எழுதினர்.
நாடகப் பின்னணியில் உருவான கதை இது. நாடகத்தில் நடிப்பதை லட்சியமாகக்...
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு: தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி மீது புகார்
கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான்நாடாளுமன்றத்தின் 266 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதுவரை வெளியான முடிவுகளில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீபின்பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் 75 தொகுதிகளிலும், பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள்கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.இந்த சூழலில் ராவல்பிண்டிதேர்தல் ஆணையர் லியாகத்அலி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதற்கு தலைமை தேர்தல் ஆணையரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உறுதுணையாக உள்ளனர். பல்வேறு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார்80,000 வாக்குகள்...
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனிடையே ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் போட்டி...
ஜெய்ஸ்வாலுக்கு கெவின் பீட்டர்சன் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில்அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 2, 3-வது டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்துகெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது: நான்பார்த்தவரையில் இந்திய மண்ணில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம்...
ஆசிய பாட்மிண்டன் விளையாட்டு: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்
ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
மலேசியாவின் சிலாங்கூரின் ஷா ஆலம் பகுதியில் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியா, தாய்லாந்து...














