Home 2024
Yearly Archives: 2024
ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த அணியில் கேரளாவைச் சேர்ந்த கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்திருந்தார். இந்நிலையில் கேரள அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுக்கு முன் விடுதி மாடியில் இருந்து விழுந்து செயலிழந்து போன மகனை கருணைக்கொலை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு
பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முற்றிலுமாக செயலிழந்துபோனார். மகனை காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர்அவரை மருத்துவமனையில் அனுமதித்து இடைவிடாது சிகிச்சை அளித்து வருகின்றனர். எத்தகைய பேச்சும், அசைவுமின்றி படுத்தப்படுக்கையாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு ரைல்ஸ் குழாய் மூலம் மருத்துவமனையில் உணவும், மருந்தும் அளிக்கப்பட்டு வருகிறது. ரைல்ஸ் குழாய் என்பது மூக்குதுவாரம் வழியாக நேரடியாக...
ஆந்திர மருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், ராம்பில்லி மண்டலம், அச்சுதாபுரம் எனும் ஊரில் ஒரு தனியார் பார்மா நிறுவனம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 300 முதல் 380 பேர் வரை பணி புரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம்ஷிப்டின் போது, தொழிற்சாலைக்குள் இருந்த ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களுக்கும் இந்த சத்தம் கேட்டுள்ளது. உடனே தொழிலாளர்கள் பலர் அலறி அடித்து கொண்டு தொழிற்சாலையை விட்டு...
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல்: 9 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது பாஜக
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர்3-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்க வேண்டியது மிக முக்கியம். மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களின் மொத்தஎண்ணிக்கை 229-ஆக உள்ளது.இதில் பாஜகவுக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனர். தே.ஜ. கூட்டணி கட்சியினரை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 105 ஆகவும், 6 நியமனஎம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால்தே.ஜ.கூட்டணியின் பலம் 111-ஆக உள்ளது. ஆனாலும் பெரும்பான்மைக்கு 4 உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்களவை...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2-வது அணு உலை உற்பத்தியை தொடங்கியது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது. இதுகுறித்து இந்திய அணு மின் சக்தி கழகம் (என்பிசிஎல்) வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணு மின் நிலையத்தில் (கேஏபிஎஸ்) நிறுவப்பட்டுள்ள 4-வது அணு உலை முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகா வாட்அணு உலை ஆகும். முதல் 700 மெகாவாட் அணு உலை இதே நிலையத்தில் (3-வது) ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது” என...
ஜெகன் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஜெகன், ஆந்திர முதல்வராக இருந்தபோது, அரசுப் பணிகள் காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனினும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம்...
ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு
தமிழகத்தின் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இதில் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை இணைப்புகளாகும்.
நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக் கூடாது. இந்நிலையில், தற்போது 83 சதவீதமாக உள்ள மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ.10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி,...
50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு: தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பில்10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் 40 வயது ஆன நிலையில் பணியில் சேர்வதால், பணிவரன் முறை மற்றும் பதவிஉயர்வுக்காக, அந்தந்த துறைகளால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே,...
ஆக.24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆன்மிக உரை, கண்காட்சி, கலை நிகழ்ச்சியுடன் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம், பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் நாளில் மாநாட்டு கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். சிறப்புக் கண்காட்சியை அமைச்சர் பெரியசாமி, வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் மற்றும்பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்...
வக்பு வாரிய சொத்து முறைகேடாக விற்பனை? – ரூ.2,000 கோடி கைமாறியதா என ஜெயக்குமார் கேள்வி
தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2,000 கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வடசென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், மத்திய அரசை...














