Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மணவாளக்குறிச்சியில் பைக் மோதி முதியவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெரு கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (74). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது மணவாளக்குறிச்சி பாலத்திலிருந்து சந்திப்பு நோக்கி வேகமாக சென்ற பைக் ஐயப்பன் மீது மோதியது. இதில்  ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு...

கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில்  கல்லூரி பேராசிரியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுமுகாமில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுமார் 150 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டது.    இந்த கல்விக்கடன் விழிப்புனர்வு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியின் மேலாளர்கள் கலந்துகொண்டனர். மேலும்  இந்த முகாம்  மூலம் வங்கி மேலாளர்களுக்கு இந்த ஆண்டின் நமது மாவட்டத்திற்கு தமிழ்நாடு...

குமரியில் மத்திய அமைச்சர் முருகன் இன்று சுற்றுப்பயணம்

மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு இணை அமைச்சர் எல். முருகன் இன்று குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று  நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்தார். அங்கு இரவு தங்கிய அவர் இன்று. ( 22-ம் தேதி )காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக  வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 1: 30 - மணிக்கு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகள்...

ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் அரசுமுறை பயணம்: போலந்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் போலந்து சென்றடைந்த அவருக்கு தலைநகர் வார்சா விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.போலந்தில் 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில்...

மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ராணுவத்தினர் அனுப்பிய 11 ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை ஏற்க உக்ரைன் மறுத்ததால், அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த 11 ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் அனுப்பியது. அதை ரஷ்ய ராணுவத்தினர்...

ஈரானில் பேருந்து விபத்து: 28 பாகிஸ்தானியர் உயிரிழப்பு

இராக்கின் கர்பலா மாகாணத்தில் லட்சக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் தற்போது அர்பயீன் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்கள் இராக்கின் கர்பலா நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம், லர்கானாபகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் மத்திய ஈரானில் உள்ள யாஸ்த் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் செல்லும்போது இவர்களின் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து யாஸ்த் மாகாண...

புச்சிபாபு கிரிக்கெட்: பாபா இந்திரஜித் சதம் விளாசல்

புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - ஹரியானா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித்197 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13பவுண்டரிகளுடன் 139 ரன்கள் விளாசிய நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். லோகேஷ்வர் 203 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு...

8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன. இவற்றுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வெல்ல மோதுகின்றன. இந்த 8 அணிகளும் இரு பிரிவுகளாக...

வெண்கலம் வென்றார் ரோனக் தஹியா

17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 110 கிலோ எடை கிரகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ரோனக் தஹியா வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் துருக்கியின் எம்ருல்லா கப்கனுடன் மோதினார். இந்த மோதலில் ரோனக் தஹியா 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: சைம் அயூப், சவுத் சகீல் அரை சதம்

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழைகாரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 16 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர். 4-வது விக்கெட்டுக்கு சைம் அயூப்புடன் இணைந்த சவுத் சகீல் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். 110 ரன்கள் சேர்த்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...