Home 2024
Yearly Archives: 2024
பாலியல் குற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மம்தா பானர்ஜி கடிதத்தில் கூறியதாவது: இந்தியாவில் நாளொன்றுக்கு 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பல சமயங்களில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்படுகொலை செய்யப்படுகிறார். இந்த போக்கு திகிலூட்டுகிறது. சமூகம் மற்றும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னம்பிக்கையைக் குலைக்கிறது.இத்தகைய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன விமானத்தின் பயிற்சி விமானி சடலமாக மீட்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல்போன பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடரும் நிலையில் அதில் சென்ற பயிற்சி விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையத்தில் இருந்து 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் காணாமல்போனது.இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. இந்த விமானம் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சண்டில் அணையில் நொறுங்கி...
விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண விரைவில் நிரந்தர குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றம் கருத்து
விவசாயிகளின் குறை தீர்க்க விரைவில் நிரந்தர கமிட்டி அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம்பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் முற்றுகையிட்ட விவசாயிகளை முடக்க ஷம்பு எல்லையை ஹரியாணா அரசு மூடியது. ஆனால், சற்றும் பின்வாங்காமல் தங்களது டிராக்டர்கள் மற்றும் புல்டோசர்களை நெடுஞ்சாலைகளிலேயே நிறுத்தி வைத்து...
வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம்: பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி
வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசுமுடிவு செய்தது. மசோதாவை ஆய்வு செய்ய மக்களவை பாஜக உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட இரு அவைகளின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்...
26 கிலோவுக்கு மேல் அடைத்து விற்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் விக்கிரமராஜா வலியுறுத்தல்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா டெல்லி சென்று, பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து, வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைத்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்தார். அப்போது, நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.அப்போதுபேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநிலகூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன் ஆகியோர் உடனிந்தனர். அந்த மனுவில் இடம்பெற்ற விவரங்கள் வருமாறு:அரிசி மற்றும்...
பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு: நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர்திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திண்டிவனம் தாலுகா அவ்வையார்குப்பம் ஊராட்சித் தலைவர் மகாலட்சுமி, கடந்த 20-ம் தேதி மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நாளில்இருந்து அலுவலகத்தில் இருக்கையில் அமரவிடாமல் சிலர் தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.மன உளைச்சல்: இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி விசிகதலைவர் திருமாவளவன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் ஊராட்சி...
3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், வரும் 27-ம் தேதி முதல்17 நாட்களுக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முதலீடுகளை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழகஅரசின் கடமையாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் 4 நாள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்தியபேச்சுவார்த்தையின் அடிப்படையில், மொத்தம் ரூ.6,100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஆனால், அந்த...
திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன ஆலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில்புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டாபர் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம்ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில்துறை, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.அந்த வகையில், வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறு உள்ளிட்ட...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறினால் இருண்ட வரலாற்றில் இடம்பெறுவார் ஸ்டாலின்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறினால், தமிழகத்தின் இருண்டவரலாற்றில் ஸ்டாலின் இடம்பெறுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக யுபிஎஸ்சி வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளானது.தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசுஉத்தரவிட்டிருக்கிறது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் முதல்வரின் நடவடிக்கைகள் முன்னுக்குப் பின்...
சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் அகற்ற கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெரும் செல்வவிளை என்ற பகுதியில் வேம்பனூர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக பெருஞ்செல்வ விளை சந்திப்பிலிருந்து ஆசாரி பள்ளத்திற்கு சாலை ஒன்று செல்கிறது.
இந்த சாலையில் தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பைக், கார் போன்ற வாகனங்களில் நாகர்கோவில் பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் குறுகலான நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வேகமாக வரும் வாகனங்கள் சாலையை...














