Home 2024
Yearly Archives: 2024
அறநிலைய துறை உதவி ஆணையர் தேர்வு முடிவு வெளியானது
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 21 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 219 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடுபொதுப்பணியில் அடங்கியசுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதன்மைத் தேர்வு கடந்த ஜுன் 6 மற்றும் 11-ம்தேதி நடந்தது. இதில், நேர்முகத்தேர்வுக்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை பி, சி பிரிவு பணிகளில் 3 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயதுவரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். வயதுவரம்பு உயர்வை வென்றெடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “புதுவையில் ஆசிரியர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த...
மருத்துவாழ்மலை பிரதான சாலை கால்வாய் பாலம் பணி கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் கோட்ட பராமரிப்பிலுள்ள முக்கிய சாலையான அஞ்சுகிராமம் சாலை நாகர்கோவில் நகரத்தினையும் கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகும். மேலும் உவரி, திருச்செந்தூர், துறைமுக நகரமான தூத்துக்குடி செல்லுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இச்சாலையினையே பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் குறுகிய பாலம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பாலத்தினை பாலம் 10. 50 மீட்டர் (Clear span) அகலத்திலும், சாலை மட்டத்திலிருந்து 5. 50 மீட்டர் செங்குத்து...
மண்டைக்காடு கோவில் அஸ்வதி பொங்கல் விழா இன்று துவக்கம்
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி முதல் நாளான இன்று நண்பர்கள் 12 மணிக்கு உச்ச பூஜை, மாலை 5மணிக்கு சுமங்கலி பூஜை, 6: 30 மணிக்கு சாய் ரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது.
விழாவில் இரண்டாம் நாளான நாளை காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜ மேளம், பகல் 11:...
களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள நீர்நலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களில் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: போலந்தில் பிரதமர் மோடி தகவல்
ரஷ்யா-உக்ரைன் இடையே நிரந்தர அமைதி ஏற்பட இந்தியா ஆதரவாக இருக்கும் என போலந்தில் பிரதமர் மோடி கூறினார். போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுபோலந்து வந்த இந்திய பிரதமருக்கு தலைநகர் வார்சாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:
உலகின் மற்ற நாடுகளில் இருந்து விலகியிருக்கும்...
அமெரிக்க பல்கலை.யில் பயில்வதற்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டை துறந்தார் இந்தியாவின் அர்ச்சனா காமத்
சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியில் அர்ச்சனா காமத் இடம் பெற்றிருந்தார். அவரை உள்ளடக்கிய இந்திய அணி முதன்முறையாக கால் இறுதி சுற்றில் கால்பதித்து சாதனை படைத்திருந்தது. எனினும் அந்தசுற்றில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கால் இறுதி சுற்றில் மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்த போதிலும் தனது ஆட்டத்தில் அர்ச்சனா காமத் வெற்றியை வசப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் 24 வயதான அவர், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு...
ENG vs SL | இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கைஅணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 74, மிலன் ரத்னாயகே 72 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது. பென்...
சவுத் சகீல் 141, ரிஸ்வான் 171* ரன் விளாசல்: பாகிஸ்தான் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சவுத் சகீல் 141 ரன்களும், முகமதுரிஸ்வான் 171 ரன்களும் விளாசினர்.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர். சவுத் சகீல் 57,...
உத்தரபிரதேசத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய மொய்த் கானின் வணிக வளாகம் இடிப்பு
உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சா நகரில் பேக்கரி நடத்தி வந்த மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜு கான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜூலை 30-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் கர்ப்பமாக இருப்பது...














