Google search engine
Home 2024

Yearly Archives: 2024

“சென்னை நிலமாக மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” – முதல்வர் ஸ்டாலின்

“சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22-ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. சென்னை '385' வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!...

கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அலோசியஸ் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது  என்ற...

கிருஷ்ண ஜெயந்தி நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம்

ஹிந்து கோவில் கூட்டமைப்பு திருவட்டார் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று செருப்பாலூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து ரக்ஷபந்தன் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் விளாத்துறை முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் , தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு குழித்துறை சந்திப்பிலிருந்து கழுவன்திட்டை சந்திப்பு வரை நேற்று நடை பயணமாக கழுவன்திட்டை சந்திப்பில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி திருவுருவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதியோர் இல்லங்கள் வரமா? சாபமா?

முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். பல பெற்றோர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் நன்றாக வாழ்வார்கள். இத்தகைய முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரமாகவே அமையும். தோட்டத்துடன் கூடிய வீடு, தங்களை ஒத்த சக மனிதர்கள், மருத்துவ உதவி, உணவு வசதி, ஆகியவை நிம்மதி தரலாம். அதே நேரம் சுயநல நோக்குடன் தங்கள் சுகத்திற்க்காக மட்டுமே அவர்களை இம்மாதிரி இல்லங்களில் சேர்ப்பது ஒப்பு கொள்ளமுடியாத விஷயமாகும்.

டி20 கிரிக்கெட்டில் ஓரே ஓவரில் 39 ரன்கள்: சாதனை படைத்தார் சமாவோ வீரர்

ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகள் மோதின. முதலில் பேட்செய்த சமாவோ 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20-ல் சதம் விளாசிய முதல் சமாவோ வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்த...

மத்திய அரசில் உயர் அதிகாரிகள் நேரடி நியமன முறை நேரு காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது

சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மத்திய அரசு, கடந்த 18-ம் தேதி,10 இணை செயலாளர்கள் மற்றும்35 இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமன முறை (லேட்டரில் என்ட்ரி)மூலமாக பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.ஆனால் இந்த நேரடி நியமன நடைமுறை என்பது முன்னாள்...

மணிப்பூரில் நாகா அமைப்பினர் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிப்பு

மணிப்பூரின் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் நாகா பழங்குடி கிராமங்களை நோனி மாவட்டத்துடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மணிப்பூர் ரோங்மேய் நாகா கவுன்சில் 18-ம் தேதி போராட்டம் அறிவித்தது. 70 சிறுபான்மை நாகா பழங்குடியினர் வசித்து வரும் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக நாகா மாவட்டத்துடன் சேர்க்கமாநில அரசு தவறியதால் காலவரையற்ற முழு அடைப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தால் மணிப்பூரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்துடன் மணிப்பூரை இணைக்கக்கூடிய லெய்மாடாக் லோக்டாக் திட்ட சாலை,...

ஹைதராபாத்தில் பலத்த மழை: ஒருவர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது சடலம்நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள் ளது. இவர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.இதேபோன்று மற்றொருவர், ஸ்கூட்டரில் சென்று கொண்டி ருக்கும் போதே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரைஅங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றினர். ஹைதராபாத்தில் ஓடும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...