முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு குழித்துறை சந்திப்பிலிருந்து கழுவன்திட்டை சந்திப்பு வரை நேற்று நடை பயணமாக கழுவன்திட்டை சந்திப்பில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி திருவுருவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.