முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். பல பெற்றோர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் நன்றாக வாழ்வார்கள். இத்தகைய முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரமாகவே அமையும். தோட்டத்துடன் கூடிய வீடு, தங்களை ஒத்த சக மனிதர்கள், மருத்துவ உதவி, உணவு வசதி, ஆகியவை நிம்மதி தரலாம். அதே நேரம் சுயநல நோக்குடன் தங்கள் சுகத்திற்க்காக மட்டுமே அவர்களை இம்மாதிரி இல்லங்களில் சேர்ப்பது ஒப்பு கொள்ளமுடியாத விஷயமாகும்.