Home 2024
Yearly Archives: 2024
பாலியஸ்டரில் தேசியக் கொடிக்கு அனுமதி: மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்
இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
காதி துணியினால் செய்யப்பட்ட தேசியக் கொடி தேசிய பெருமையின் உருவகமாக உள்ளது. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பிரதமர் மோடி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருளுடன் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் கொடிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவரது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.இந்திய தேசியக்...
மும்பையில் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் வன்கொடுமை: மக்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.இதனால் மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்கள்...
முன்னாள் தலைமை தளபதியின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்
சென்னையில் காலமான இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி வகித்தவர் சுந்தரராஜன் பத்மநாபன்(83). இந்திய ராணுவத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றிய அவர் கடந்த 2002 டிச.31-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் சென்னை, அடையாறில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு ரூபா என்ற மனைவியும், ஸ்ரீனிவாஸ் என்ற மகனும், லஷ்மி சத்யநாராயணன் என்ற மகளும்...
நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கைதான தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் முடக்கம்
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்பக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு...
அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
மருத்துவக் கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)செயலாளர் னிவாஸ், அனைத்துமருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய சமூகநலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணைய தலைவருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் புழக்கமில்லா இந்தியா திட்டத்தின் கீழ் சில செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி வளாகங்களுக்குள் போதைப் பொருள்...
தேவையின்றி குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் சிறையில் அடைப்பதால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு? – அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தேவையில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு போலீஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடலாமா என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குண்டர் தடுப்புச் சட்டத்தை போலீஸார் தேவையில்லாமல் தங்களது இஷ்டம்போல பயன்படுத்தி வருவதாகவும், சில வழக்குகளில்...
53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்: மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுமா?
மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மதுரை உருவாக்கப்பட்டது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை உள்ளிட்ட அன்றாட அடிப்படை, மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மாநகராட்சி மைய அலுவலகம்...
வயநாடு நிலச்சரிவு, கனமழையால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய தேக்கடி: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் வேதனை
வயநாடு நிலச்சரிவு, தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப் படுகின்றன.
தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் வனச்சரணாலய பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த சில...
ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர் முதல்முறையாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.
மூன்றாவது முறையாக பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்த பின்னர் பிரதமர் மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அந்தப் பயணம் சர்வதேச கவனம் பெற்றது.ரஷ்யாவில் பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட்...
குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குரங்கு அம்மை பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஐ.நா. அறிவித்துள்ளதையடுத்து வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் (விஆர்டிஎல்) தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட்14-ல் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.இந்தநிலையில்தான், இந்திய மருத்துவ கவுன்சிலுடன்...














