Home 2024
Yearly Archives: 2024
ரக் ஷா பந்தன் தின கொண்டாட்டம்: பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய மாணவிகள்
சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினம் நாடெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு நேற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவரது கையில் ராக்கிக் கயிறு கட்டினர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.முன்னதாக பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத் தில் கூறும்போது, ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்...
கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் உடல் சொந்த ஊர் சென்றது
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் (59) சென்னை வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென...
6 வழித்தட பணிகள் 2025 ஏப்ரலில் முடியும்: கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலு தகவல்
கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில் 15 கிமீ நீளம் கொண்ட இச்சாலையில், 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.எனவே, இச்சாலையை...
சென்னையில் மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டம்: சீமான், பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு
கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், ``தமிழ்நாடு மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரியம், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக களஉதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து 400,500 கி.மீட்டர் தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிசுமையிலும், மன அழுத்தத்துடனும் பணி...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றே ராஜ்நாத் சிங் பங்கேற்றார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றே ராஜ்நாத்சிங் பங்கேற்றார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
தென்னிந்திய அளவிலான செய்தி ஒளிபரப்புத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை அகில இந்திய வானொலி மையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன் டிடி தமிழ் சேனல் மேம்படுத்தப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் டிடி தமிழின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 3...
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த வெள்ளம்
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ள நீர் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம்உள்ளது. அங்கு தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைகளும், அதன்நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியும் பிரசித்தி பெற்றவை.
கடந்த சில மாதங்களாகவே பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...
விஜய் படத்துக்கு ஆங்கில தலைப்பு ஏன்? – வெங்கட் பிரபு விளக்கம்
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர்.
செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்...
நாட்டிய ராணி: பாதியில் வெளியேறிய நாயகி; கதையை மாற்றிய தயாரிப்பு!
தமிழில் 1930-40 களில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பி.என்.ராவ். நடனத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய படம், ‘நாட்டிய ராணி’. வைஜயந்தி மாலாவின் தாய் வசுந்தரா தேவி நாயகியாக நடித்தார்.
மைசூரில் பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராக இருந்த பி.எஸ்.ராஜா அய்யங்கார் நாயகன். பி.எஸ்.சரோஜா, ஜெயம்மா, டி.எஸ்.பாலையா, ‘பம்பாய்’ சார்லி, நவநீதம் என பலர் நடித்தனர். இலங்கை நடிகை தவமணி தேவி சிறிய வேடத்தில் நடித்தார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார். பாஸ்கர் பிக்சர்ஸ் தயாரித்த இதன் கதை, வசனத்தை கம்பதாசன் எழுதினார்.பாபநாசம்...
“ஆக்ஷன் படங்களின் அடிப்படை மாணிக்கம் – பாட்ஷா தான்!” – எஸ்.ஜே.சூர்யா
நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா'ஸ் சாட்டர்டே'. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில், எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: இதுவரை பல ஆக்ஷன் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அனைத்துக்கும் அடிப்படை, மாணிக்கம்- பாட்ஷாதான். 'பாகுபலி' படத்திலும் இந்த அடிப்படைதான் இருந்தது.இந்தப்...
‘Educate Your Son’ – கவனம் பெறும் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டா ஸ்டோரி
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இன்ஸடாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது ஸ்டோரி அந்த கருத்தை ஒட்டி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“உங்களின் மகளை காக்கவும். (அதை ஸ்ட்ரைக் செய்த ஃபான்ட்டில் பதிவு செய்துள்ளார்). உங்களின் மகன், சகோதரர், தந்தை, கணவர், நண்பர்களுக்கு கற்பியுங்கள்” என சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான...














