Google search engine
Home 2024

Yearly Archives: 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் முடிவடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தொடரை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்றிய தென்...

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2-வது டெஸ்ட்: 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகளில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் கயானாவில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 144 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம்...

டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டு நிறைவு: மெல்பர்னில் 2027-ல் சிறப்பு போட்டி 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது. 2027-ல் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 1877-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாவது போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977-ம் ஆண்டு மார்ச் மாதம்...

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ குழுவை சேர்ந்த...

பெங்களூருவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்: மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டர்களை கீழே தூக்கிப்போட்டு நொறுக்கிய பொதுமக்கள்

பெங்களூருவின் நெலமங்களாவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து ஸ்கூட்டர்களை பிடுங்கிய பொதுமக்கள் அவற்றை மேம்பாலத்தில் இருந்து வீசி சுக்கு நூறாக நொறுக்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பெங்களூரு அருகே நெலமங்களா நகரில் உள்ள மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்டனர். இது, மற்ற பயணிகளிடையே அதிருப்தியையும், பயத்தையும் ஏற்படுத்தியது.அந்த இளைஞர்களின் செயலால் ஆத்திரமடைந்த பிற வாகன ஓட்டிகள் இரண்டு ஸ்கூட்டர்களை அவர்களிடமிருந்து பிடுங்கியதுடன் அவற்றை மேம்பாலத்திலிருந்து தூக்கிப்போட்டு சுக்குநூறாக உடைத்தனர்....

மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான...

ஹர்பஜன் சிங் கடிதம் எதிரொலி: அவசர ஆலோசனைக்கு மேற்கு வங்க ஆளுநர் அழைப்பு

பெண் மருத்துவர் கொலை தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு திறந்த மடல் எழுதிய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு பகிர்ந்த பதிவில், “ஆர்.ஜி.கர் மருத்துவமனை துயரச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்து ஹர்பஜன்...

“உடைக்க முடியாத அன்பு” – ராகுல், பிரியங்காவின் ரக்‌ஷா பந்தன் பாசப் பகிர்வு

ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆக.19) கொண்டாடப்படுகிறது. இது அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன்...

“அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக சதியை முறியடிக்க வேண்டும்” – வைகோ

“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர்...

‘அம்மா மருந்தகம், முதல்வர் மருந்தகம்’ இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதல்வர் மருந்தகத்துக்கும், அம்மா மருந்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டை கடந்த பழமைவாய்ந்த மருத்துவமனையாகும். பழமைவாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் 6 தளங்களுடன்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...