Home 2024
Yearly Archives: 2024
நாட்டின் தலைவராக சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: நாணய வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து நிற்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர்...
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாத பெண் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த 12-ம் தேதி பாப்பாநாடு...
தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை
முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- சாட்டை துரைமுருகன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியானது.
அதில், கட்சி நிர்வாகிகளை சீமான் விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.பி. வருண்குமார் சீமானின் பேச்சை ‘டேக்’ செய்து,தனது எக்ஸ்...
பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டாலர் (ரூ.8.4 கோடி) ஆகும். அதேபோல், பைபிள் விற்பனை மூலம் 3 லட்சம் டாலர் (ரூ.2.5 கோடி) வருவாய் ஈட்டியுள்ளார்...
எடை குறைப்பு பயிற்சிகளால் வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என பயந்தேன்: மனம் திறக்கும் பயிற்சியாளர் வோலர் அகோஸ்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது எடை குறைப்புக்காக இந்திய மல்யுத்த வீராங்கனை விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், இறந்துவிடுவாரோ என பயந்ததாக அவருடைய பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், அவரை தகுதி நீக்கம் செய்து...
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்: 100 நாள் போராட்டத்தை தொடங்கியது காங்கிரஸ்
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்துகூறியதாவது: சம்விதான் ரக் ஷா (அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்) என்ற பெயரில் டெல்லி முழுவதும் இந்த 100 நாள் போராட்டம் நடத்தப்படும். வரும் நவம்பர் 27-ம்தேதி வரை டெல்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெறும். படிப்படியாக நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக 3 லட்சம்சம் விதான் ரக்...
பெண் மருத்துவர் கொலை: தொடங்கியது நாடு தழுவிய மருத்துவர்கள் வேலைநிறுத்தம் – ஐஎம்ஏ-வின் 5 கோரிக்கைகள் என்ன?
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த இந்திய மருத்துவக் கழகம்...
உ.பி.யில் கான்பூர் – சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20+ பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்மப் பொருளால் வாரணாசி - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் (19168) 22 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி - சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பீம்சேன் எனுமிடத்தில் தடம்புரண்டது. அதிகாலை வேளையில் ரயில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில்...
முடா ஊழல் குற்றச்சாட்டு: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் ஒப்புதல்
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில்...
டெல்லி திரும்பினார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். எனினும்,...














