Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ககன்யான் திட்டத்துக்கு முன்பு ஆளில்லா விண்கலத்தை டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண்கலம் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர்,ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:எஸ்எஸ்எல்வி ராக்கெட் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இது இனிமேல் வர்த்தக ரீதியான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்து பல நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். அதேநேரம், உள்நாட்டு நிறுவனங்களுக்கு...

மானிய செலவு அதிகரிப்பால் மின்வாரியத்துக்கு ரூ.519 கோடி தர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்கட்டண உயர்வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.இதன்படி, இந்த நிதியாண்டுக்கு ரூ.15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதில், வீடுகளுக்கு மானியம் ரூ.7,225 கோடியும், விவசாய...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்,...

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் போராட்டம்: பேரணியாக சென்று மனு

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவரை மாநகராட்சி தன்னார்வலரான சஞ்சோய் ராய் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட அந்த மாணவிக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள்...

அரசு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம்: திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்‌ கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணிக்குப்...

“பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே கொள்கை வகுக்கும் மத்திய அரசு” – டி.ஆர்.பாலு சாடல்

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். “நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு” என்று அவர் சாடியுள்ளர்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது,...

திருமாவளவனின் 62-வது பிறந்தநாள்: சென்னை, புதுச்சேரியில் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு

விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையிலும், நாளை (சனிக்கிழமை) புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது 62-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாலை 3 மணி அளவில் விழா நடைபெறவுள்ளது. முதலில் கானா...

ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை: தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு

ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது. இன்று மாலை 3 மணிக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனெனில் ஊடக சந்திப்புக்கான தேர்தல் ஆணைய அழைப்பில் எந்தெந்த மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகிறது என்று குறிப்பிடப்படவில்லை. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் வரும்...

கருணாநிதி நினைவு நாணயம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும்,...

இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது: வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வேண்டுகோள்

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின்னர் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடைமைகள், கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.இதனிடையே இந்துக்கள் மீதானதாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 5 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர்.சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...