Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மோதிரமலை தற்காலிக பாலம் 3 நாளில் சீரமைப்பு: பஸ் இயங்கியது

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு மலைப்பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால்  காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை பாலம் முழுமையாக சேதம் அடைத்தது.   இதனால் மலையோர கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.   மலை கிராம மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு இடையே பாரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உடனடியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. மூன்று நாட்களில் மீண்டும் தற்காலிக பாலம்...

மலைக்கிராம கதையில் யோகிபாபு

யோகிபாபு, லட்சுமி மேனன், காளி வெங்கட், குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மலை’. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். “மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. ஆனால், மனித பேராசை இயற்கையை மொத்தமாக அழிவின் விளிம்பில் கொண்டு வந்து இன்று நிறுத்தியிருக்கிறது. தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் கதையான இதில் மனிதனின் சுயநலப்...

‘கெவி’யில் உண்மை சம்பவம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, உமர் ஃபரூக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார்.படம் பற்றி நாயகன் ஆதவன் கூறும்போது, “மலைக் கிராமத்தில் வசிக்கும், எந்தப் பிரச்சினைக்கும் போகாத இளைஞனாக...

போலந்தில் இருந்து உக்ரைனுக்கு அதிநவீன ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

போலந்து நாட்டில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு பிரதமர் மோடி சிறப்பு ரயிலில் பயணம் செய்தார். உக்ரைன் நாட்டின் ரயில் வழித்தடம் 24,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். உலகில் மிக நீளமான ரயில் வழித்தடங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு12-வது இடத்தில் உள்ளது. உக்ரைனின் ரயில் வழித்தடங்கள் மீதுரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையே நட்புறவு நீடித்தபோது உக்ரைன் ரயில்வே சார்பில் கிரீமியா பகுதிக்கு சொகுசு ரயில் இயக்கப்பட்டது....

ரஷ்யா உடனான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபருடன் மோடி முக்கிய ஆலோசனை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரைநிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள்தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், பிரதமர் மோடிகடந்த...

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் கண்டெடுப்பு

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது. இந்நிலையில் இங்கு கனடாவின் லூகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுரங்கத்தில்இருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமாக கருதப்படுகிறது.1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட்கல்லினன் வைரம் உலகின் மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. இது 9 தனித்தனி கற்களாக வெட்டப்பட்டது....

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள்தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி அரசுமுறை பயணமாக போலந்துக்கு சென்றார்....

நிகோலஸ் பூரன் காட்டடி தர்பாரில் தென் ஆப்பிரிக்காவை நொறுக்கியது மே.இ.தீவுகள்    

தரவ்பாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் 174/7 என்ற இலக்கிற்கு எதிராக மே.இ.தீவுகள் 17.5 ஓவர்களில் 176/3 என்று காட்டடியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது. மற்ற எந்த வடிவத்திலும் திக்கித் திணறும் மே.இ.தீவுகள் டி20 வடிவத்தில் உண்மையில் ஒரு சக்தியாக எழுச்சி பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தப் போட்டி இன்னொரு உதாரணமாகத் திகழ்ந்தது. பிரையன் லாரா அகாடமி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆகச்சிறந்த அதிக ஸ்கோரின்...

PAK vs BAN டெஸ்ட் போட்டி: வங்கதேச அணி பதிலடி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171,சவுத் சகீல் 141 ரன்கள் விளாசினர்.இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27...

டைமண்ட் லீக் தொடர்: 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ்ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்தசீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்தது. 4-வது வாய்ப்பு வரை நீரஜ் சோப்ரா 4-வது இடத்தில்தான் இருந்தார். 5-வது முயற்சியில் 85.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து கடைசி முயற்சியில் அவர், 89.49 மீட்டர் தூரம் எறிந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...