Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சட்ட விரோதமாக இந்திய பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதி கைது

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இலங்கை அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டம் கருவேப்பம் பாடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தான் இவரது தந்தை.1985-ல் இலங்கை அகதியை திருமணம் செய்த பாஸ்கரன், இலங்கையில் ஜேசுதாசன் என்ற பெயரில் குடியேறியுள்ளார். பின்னர் 1990 இலங்கையில் இனக் கலவரம் ஏற்பட்ட போது பாஸ்கரன் குடும்பத்துடன் இந்தியா வந்து சிவகாசி முகாமில்...

எது நல்ல ஒளிப்பதிவு? – ராம்ஜி நேர்காணல்

சினிமா என்பது கூட்டுக் கலை. இந்தக் கலையில் இயக்குநர்களின் பார்வையை அப்படியே திரையில் கொண்டு வருவது ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மையையும் நடிகர்களின் உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொடுக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், ராம்ஜி. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், தனி ஒருவன், ஒத்த செருப்பு உட்பட பல பேசப்பட்ட படங்களின் ஓளிப்பதிவாளர். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் பணியாற்ற இருக்கும் ராம்ஜியை, சந்தித்தோம்... “இயக்குநர் செல்வராகவனோட தொடர்ந்து 3 படங்கள் பண்ணிட்டேன். நாலாவது படம் பண்ணப் போறேன். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல புரிதல்...

டெலிகிராம் மெசஞ்சரும், பாவெல் துரோவ் கைதும் – முழு பின்னணி | HTT Explainer

டெலிகிராம் மெசஞ்சரின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. டெக் துறை சார்ந்து இயங்கி வருபவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் அடிப்படையில் டெலிகிராம் மெசஞ்சர் குறித்து கொஞ்சம் அறிவோம். மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக இயக்குனர் பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உலக அளவில் டெலிகிராம் பயன்பாடு எப்படி உள்ளது போன்றவற்றை விரிவாக பார்ப்போம். டெலிகிராம்: கடந்த 2013-ல் அறிமுகமான மெசஞ்சர் செயலிதான் டெலிகிராம். இதனை...

கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன ராணுவம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன போர்க் கப்பல்கள், உளவு கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதற்கு இலங்கை அரசிடம், இந்தியா ஏற்கெனவே தனது அதிருப்தியை தெரிவித்தது. ஆனாலும், சீன...

ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஆமிர்கான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் உபேந்திராவும் நடிக்க இருக்கிறார். அவர், இந்தப் படத்தின் லுக் டெஸ்டில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். பிறமொழிகளில் இருந்து மேலும் சில நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இப்போது நடந்து வரும் நிலையில், பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், இதில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

செப்.8-ல் நட்சத்திர வாலிபால் போட்டி

திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக்’ போட்டி சென்னையில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. கே.எஸ்.டி. ஸ்டுடியோஸ், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஆதரவோடு முதலாவது தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டியை சென்னையில் நடத்துகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை ஸ்டார்ம்ஸ், மதுரை ஹரிகேன்ஸ், கோவை தண்டர்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன.சென்னை அணிக்கு மாகாபாவும், மதுரை அணிக்கு கே.பி.ஒய். தீனாவும், கோவை அணிக்கு...

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ லெவன் 294 ரன் குவிப்பு

புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 87 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், பாபா இந்திரஜித் 115 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் எடுத்தனர். பூபதி வைஷ்ண குமார் 63,...

‘பி’ டிவிஷன் வாலிபால் இன்று தொடக்கம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் இன்று (ஆக.28-ம் தேதி) தொடங்குகிறது. மகளிருக்கான போட்டி 30-ம் தேதி வரையும், ஆடவருக்கான போட்டிகள் 31-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் 31 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.

ENG vs SL | 2-வது போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிப்பு

இங்கிலாந்து - இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.29-ம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஆலி ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் மாற்றம்...

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் இன்று கோலாகல தொடக்கம்: இந்தியாவில் இருந்து 84 பேர் பங்கேற்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல போராட உள்ளனர். இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் 12 வகையிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய அணியானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...