Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சமூக ஊடகத்தில் தேசவிரோத தகவலை பதிவிட்டால் ஆயுள்: புதிய கொள்கை வெளியிட்டது உ.பி. அரசு

 உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சமூக ஊடக கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் நடவடிக்கை பாயும்.தேசத் விரோத தகவல்களை பதிவிட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆபாசம் மற்றும் அவதூறு தகவல்களை பதிவிட்டால், குற்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் தகவல் தொழில்...

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப்பதிவு சட்ட மசோதா தாக்கல்

அசாம் சட்டப்பேரவையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற சட்ட மசோதவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது. இந்த சட்ட மசோதா பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில்ஈடுபட்டன. இவற்றுக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்வர்ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘‘இதுவரை முஸ்லிம் தனிநபர் சட்டப்படி திருமணம் என்பது ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையிலான ஒப்பந்த...

பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் வக்பு வாரிய சொத்து ஆகாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளபுர்ஹான்பூர் கோட்டை வளாகத்தில் அரண்மனை, ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர் ஷாவின் கல்லறை,பிபீ சாஹிம் மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இவை முஸ்லிம்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை யாவும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் எனஅறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டின் கீழ் அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தநினைவுச் சின்னங்கள் அனைத்தும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மத்திய பிரதேச மாநிலவக்பு வாரியம் அறிவித்தது. மேலும் அந்த இடத்தை இந்தியதொல்லியல் துறை உடனடியாககாலி செய்து, சொத்துகளை வக்புவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்...

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு: விமர்சித்த பிரகாஷ் ராஜ்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். “போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து ஜெய் ஷாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஐசிசி தலைவராக ஜெய் ஷா...

மது விற்பனை குறைந்ததால் ஊழியர்கள் சஸ்பெண்ட்: டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை குறைவாக நடைபெற்றதாக டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 86 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 46 கண்காணிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், டாஸ்மாக் கடைகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும் என...

பி.எஸ்.கல்வி சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ளபி.எஸ். கல்வி சங்கத்தின் 50-ம்ஆண்டு பொன்விழா கொண்டாட் டம், வரும் 31-ம் தேதி (சனிக் கிழமை) தொடங்குகிறது. பென்னாத்தூர் சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்ட பி.எஸ். கல்வி அறக்கட்டளையின்கீழ் 1974-ல் உருவானது பி.எஸ். கல்விசங்கம். இந்த சங்கத்தின் சார்பில்நடத்தப்படும் பல்வேறு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த கல்வி சங்கத்தின் பொன் விழா ஆண்டு தொடக்கநிகழ்ச்சி, 31-ம் தேதி (சனி) மாலை மயிலாப்பூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் ஆர்.சிதம்பரம், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்...

கல்வியில் சமய பாடங்களை புகுத்தும் முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானத்தை செயல்படுத்த கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.ஏற்கெனவே பல மடங்கு கட்டண...

புதிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசுஅழுத்தம் கொடுப்பதால், 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டிய நிலைஏற்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய பங்கீட்டுத் தொகை ரூ.573 கோடி மற்றும் கடந்த ஆண்டுதமிழக பள்ளிக்கல்வித் துறைக்குவரவேண்டிய கடைசி தவணையான ரூ.249 கோடி...

ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு; மீண்டும் வாதங்களை முன்வைக்க அமலாக்க துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் பெற்று அதை முறைகேடாகப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்ததாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த2011-ம் ஆண்டு ஊழல் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி...

பத்மனாபபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...