Google search engine
Home 2024

Yearly Archives: 2024

உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து புதின், பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்தும், சுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், ரஷ்யா - உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு...

திருப்பதி தேவஸ்தானத்தில் கோடி கணக்கில் முறைகேடு: முன்னாள் அறங்காவலர், நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ்

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டுமுன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கருணாகர் ரெட்டி, முன்னாள் நிர்வாகஅதிகாரி தர்மாரெட்டி உட்பட மேலும்பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்சி, எஸ்டி-க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களை கட்டவும், நலிந்த கோயில்களை...

பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளது. குறைகளைத் தீர்க்குமாறு கோரிக்கை அல்லது புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றவிதி தற்போது உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் குறை தீர்ப்பு கால அவகாசத்தை 21 நாட்களாக குறைத்தல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இனி இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது www.pgportal.gov.in என்றபெயரில் குறைதீர்ப்பு மனுக்களுக்கான...

மியா முஸ்லிம்கள் அசாமை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்

அசாமின் நாகவுன் மாவட்டம், திங் என்ற இடத்தில் கடந்த 22-ம்தேதி மாலை 14 வயது மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அவர், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவான மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டம் ஒழுங்கு நிலவரம்குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது முதல்வர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின....

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இதனிடையே 29 பேர் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது பாஜக. அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4-ம் தேதி...

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை சிறப்பு நீதிமன்றம் செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் கடந்த 2008-ம்ஆண்டு வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இந்த வீட்டு மனைகளில் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி லாபம் சம்பாதித்ததாகவும், அதற்கு...

அரசியலமைப்பு சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தது பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்: அண்ணாமலை வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் தொடங்கிய தமிழ்மொழி அகாடமி சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆங்கிலப் புத்தகம், சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ்ப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், ‘இந்திய அரசியலமைப்பு’ எனும் புத்தகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...

தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்ப பெற மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்கராஜ் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும்,...

நடிகர் விஜய் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற கோரி புகார்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு

நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை அகற்ற கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை சமீபத்தில் வெளியிட்டார். மஞ்சள்,கருஞ்சிவப்பு நிறங்கள் அடங்கியஅந்த கொடியில், இரண்டு யானைகள் மற்றும் நடுவில் வாகை பூ இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், தங்கள் கட்சியின் சின்னமான யானையை விஜய் பயன்படுத்தியதற்கு, பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இதன்தொடர்ச்சியாக நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் பகுஜன் சமாஜ்...

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் மத்திய அரசு நிதி மீண்டும் நிறுத்தம்: மானியத்தை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு மீண்டும் நிறுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா) இந்த நிதியை பெற மத்திய...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...