Home 2024
Yearly Archives: 2024
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி ரேஸ்… கன்னியாகுமரி அருகே களைகட்டிய போட்டி…
மகாவிஷ்ணு அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான ஆவணி மாதம் அஷ்டமி தினத்தைப் பக்தர்கள் கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர்.
மேலும் குழந்தைகளுக்குக் கிருஷ்ணர் ராதா வேடமிட்டு கோவில்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்துவர் சில இடங்களில் உறியடி திருவிழாவும் நடக்கும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மாநில அளவிலான மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதனைத் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்...
முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் வேண்டாம் குமரி எம்பி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் 2-ம் முறையாக போட்டியிட்டு வென்ற விஜய் வசந்த் எம்பி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். களியக்காவிளை அருகே ஊரம்பு பகுதியில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம். பி. யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: -
எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம். பழனி கோவிலில் முருகனை...
திரை விமர்சனம்: கொட்டுக்காளி
பாண்டிக்கு (சூரி) என்று முடிவு செய்யப்பட்ட முறைப் பெண் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக, அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். அதனால், அவரை பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில், குடும்பத்தினர் இடையிலான உரையாடல் மற்றும் செயல்களின் வழியாக, உண்மையில் யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? அது எப்படிப்பட்ட பேய்? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்கிறது கதை.
ஒரு கிராமத்தின் அதிகாலையில் தொடங்குகிறது படம். சாமியாருக்குக் கொடுக்க வேண்டி, கல்லில் கட்டி வைக்கப்பட்டிருக்கும்...
ரூ.100 கோடி வசூலை நோக்கி ‘தங்கலான்’
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்த இந்தப் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 15-ம் தேதி வெளியானது. வரும் 30-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்தப்படம், இப்போது உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ சூப்பர் ஹிட்டானது.இந்தப் படத்துக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தனுஷுடன் மீண்டும் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “திருச்சிற்றம்பலம்' படத்துக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே அதை இயக்குகிறார். அதுவும் சிறந்த படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ராக்கெட்களை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் அவசரநிலை அறிவிப்பு
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.
லெபனான் நாட்டின் பிரதான அரசியல்கட்சியாகவும், துணை ராணுவ படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.கடந்த ஜூலை 30-ம் தேதி லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய...
மகளிர் டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின்,...
திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்: சென்னை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை திட்டவட்டம்
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத்,...
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்: தன்வி பத்ரி சாம்பியன்
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி, வியட்நாம் வீராங்கனை தி து ஹுயன் குயனுடன் மோதினார்.
இதில் தன்வி பத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தி து ஹுயன் குயனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து வெண்கலப் பதக்கத்தைக்...
ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டதால் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீடு மற்றும் 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் நிதி முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார், என இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி...













