முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் வேண்டாம் குமரி எம்பி

0
53

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் 2-ம் முறையாக போட்டியிட்டு வென்ற விஜய் வசந்த் எம்பி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவித்தார். களியக்காவிளை அருகே ஊரம்பு பகுதியில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம். பி. யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்  கூறியதாவது: – 
     

எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம். பழனி கோவிலில் முருகனை பற்றி கருத்தரங்கம் நடை பெற்றது. இதை அரசியல் ஆக்கவேண்டாம்.  இதற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அரசங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியகவே நான் கருதுகிறேன்.
 

தமிழக வெற்றி கழக கொடி அறிமுகம் தொடர்பான விமர்சனங்கள் தொடர்பான கேள்விக்கு அவர் கூறுகையில், –  விமர்சனங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மக்களும் அரசியல் வட்டராங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தருணத்தில் விமர்சனங்கள் இயற்கையானது. இந்த விமர்சனங்களை தாண்டி வருவது தான் வெற்றிக்கான இலக்கு. பிரதமரின் உக்ரைன் பயணம் குறித்த கேள்விக்கு, –   உக்ரைனுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அங்குள்ள பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். அதன் நிலைப்பாடு இனிமேல் தான் தெரியும். என விஜய் வசந்த் எம். பி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here