Home 2024
Yearly Archives: 2024
குமரி மாவட்டத்தில் 1,300 ரேஷன் கார்டுகள் அச்சடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5,964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4,180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1,300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர் அவை உரிய நபர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமினை பார்வையிட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பகுதி கோழிவிளை இலங்கைவாழ் தமிழர் மறுவாழ்வு முகாமினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று (செப்.,13) பார்வையிட்டார்.
இம்முகாமில் 108 குடும்பங்களை சார்ந்த 333 நபர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களுக்கு தனித்தனியே ஒரு கழிப்பிடம் வீதம் 50 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கு தனித்தனியாக ஐந்தைந்து கழிப்பிடங்கள் வீதம் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு...
வியட்நாமில் யாகி புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு
வியட்நாமில் யாகி புயலுக்கு சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 125-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
வடக்கு வியட்நாமை யாகி புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது கனமழை பெய்ததுடன், மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள், மரங்கள், பாலங்கள் பெயர்ந்து விழுந்தன. பல கட்டிடங்கள், தொழிற்சாலைகள் சேதம் அடைந்தன. புயலின் வேகம்மறுநாள் தணிந்தாலும் கனமழை தொடர்ந்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்நிலையில், "இந்தப் பேரிடரில் இதுவரை 197 பேர்...
உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் அளித்த பேட்டியிலும், ‘‘ ரஷ்யா-உ க்ரைன் இடையேயான பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்ற முடியும் என நம்புகிறோம்’’ என கூறினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், ‘‘ ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைக்கு இந்தியா மற்றும் சீனா தீர்வு காண முடியும்’’ என்றார். இதையடுத்து அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்க...
45-வது செஸ் ஒலிம்பியாட் | இந்திய ஆடவர் அணி மொராக்கோவை வீழ்த்தியது: மகளிர் அணியும் வெற்றியுடன் தொடங்கியது
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, மொராக்கோவின் திசிர் மொஹமதுவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதேபோன்று அர்ஜூன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலின் போது ஜாக் எல்பிலியாவையும், விதித் குஜராத்தி 27-வது காய் நகர்த்தலின் போது ஒவாகிர் மெஹ்தியையும், ஹரிகிருஷ்ணா 33-வது காய் நகர்த்தலின் போது அனஸ் மோயாத்தையும்...
ஐஎஸ்எல் 11-வது சீசன்: தொடக்க ஆட்டத்தில் இன்று மோகன் பகான் – மும்பை மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறுகிறது. மோகன் பகான் அணி கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
ஐஎஸ்எல் தொடரில் மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன....
துலீப் டிராபி: இஷான் கிஷன் சதம் விளாசல்
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் இடையிலான ஆட்டம் அனந்தபூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பீல்டிங்கை தேர்வு செய்ததது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘சி’ அணி முதல் நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித் 136...
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி: 2-வது நாளில் இந்தியா தங்க வேட்டை
சென்னை நேரு விளையாட்டரங்கில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி நடை பெற்றுவருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஐயப்பா பந்தய தூரத்தை 13.93 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான சபிதா டாப்போ இலக்கை 13.96 விநாடிகளில் எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கையின் சந்துன் கோஷாலா பந்தய தூரத்தை 14.06 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்....
மதுபான ஊழல் வழக்கில் கைதான அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனக்கு ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று...
ஹரியானாவில் 89 தொகுதியில் காங். போட்டி: மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ (எம்) கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைய இருந்த நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் பட்டியலை பகுதி பகுதியாக வெளியிட்டு வந்தது. நேற்றுமுன்தினம்...














