Google search engine
Home 2024

Yearly Archives: 2024

உ.பி.யில் இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்

உத்தர பிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மதியம் சாப்பிட இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை அந்த பள்ளி வெளியேற்றியுள்ளது. பள்ளியில் இறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதிய உணவு சாப்பிட 7 வயது மகனுக்கு இறைச்சி பிரியாணி கொடுத்திருக்கிறார் தாய். இதையடுத்து, அந்த மாணவன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவனின் தாய்க்கும் பள்ளி முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் காணொலியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இதனால்...

மதரஸாக்களில் முறையான கல்வி வழங்கப்படுவதில்லை: குழந்தைகள் உரிமை ஆணையம் அறிக்கை

உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்மாதம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், “மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்படுவதில்லை. அங்கு முறையான பாடத்திட்டங்கள் இல்லை....

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளி மாநில கலைஞர்கள் பங்கேற்பார்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல்நாளில் ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கஉள்ளார். அன்று இரவு முதல், வாகன சேவைகள் தொடங்குகின்றன. பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் உற்சவரான மலையப்பர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது தினமும் 2 வாகனங்களில் சுவாமி உலா வருவார். இடையே தங்க தேர் ஊர்வலமும், தேர் திருவிழாவும் பிரம்மாண்டமாக...

துணை மருத்துவ படிப்புக்கும் 7.5% இட ஒதுக்கீடு: விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பு மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இதன்மூலம் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில்...

அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் இன்று தாக்கல்

அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் இன்று (செப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும்விசாரணை செய்து...

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் நாளை குரூப் – 2 முதல்நிலை தேர்வு: 2,327 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் போட்டி

ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820...

விஜய் கட்சியின் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு? – செப்.23-ல் நடத்த ஏற்பாடு தொடங்கவில்லை

விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம்22-ம் தேதி கட்சியின் கொடி,பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும்கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக, பலரிடமும்கருத்து கேட்கப்பட்டு கட்சியின்கொள்கைகளை அவர் வகுத்துவருவதாகவும், அந்த...

முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், அவரது மறைவு முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவர்வழங்கிய தாக்கம்...

தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன், தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வசந்தம் நகர் பகுதியில் உள்ள மதுபார் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் மேல பெருவிளை பகுதியை சேர்ந்த கார் டிரைவரான செல்வன் ஜெபராஜ் (வயது 29) வந்தார். அவர் ரவீந்திரனிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வன் ஜெபராஜ் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து ரவீந்திரனை தாக்கினார். இதில் காயமடைந்த ரவீந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்...

கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் பனிஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அப்பகுதியில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்கும் போது ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை பனிஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் பனிசுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மறுநாள் பனிஷ் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஸ், அவரது சகோதரர் செல்வகணேஷ், ராஜகுமார் ஆகியோர் சேர்ந்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...