Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பள்ளி ஊழியர் பணி இடை நீக்கம்; நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்றில் தூத்தூரை  சார்ந்த சகாயராணி என்பவர் அலுவலக பணியாளராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்தூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அதை வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு செய்து வாங்கி உள்ளார். அப்போது வங்கி கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சகாயராணி கூறியுள்ளார். இந்த நிலையில் பள்ளி...

கள்ளசாராய ஊறல் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிரடி

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பிகை மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திற்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிய வனச்சரகர் கலையரசன் வனத்துறையினருடன்நேற்று (செப்.,12) சம்பந்தபட்ட இடத்திற்க்கு சென்று சோதனை செய்தார்கள். சோதனையில்  வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த ராமர் காணி (49) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்க்கான பொருட்கள் மற்றும் சாராய ஊறல்களும் ஒரு தள்ளுவண்டியினுடைய அடியில் ஒளித்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில் ராமர் காணிக்கு...

புகையிலை விற்பனை செய்த வியாபாரி குண்டாஸில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார்  கைது செய்து குண்டச்சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் பளுகல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணுமாமூடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில் வியாபாரி விஜயன் என்பவரை கைதுசெய்தனர். மேலும்  போலீசார், ஏராளமான குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்ததுடன் விஜயனை குழித்துறை சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல புகார்கள் இருந்துள்ளது.  இந்த நிலையில் விஜயனை குண்டர்சட்டத்தில் கைது செய்ய...

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது கொலம்பியா

 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி களமிறங்கவில்லை. கொலம்பியா அணி தரப்பில் 25-வது நிமிடத்தில் யெர்சன் மாஸ்கோரா கோல் அடித்து அசத்தினார். 48-வதுநிமிடத்தில் அர்ஜெண்டினா...

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத் அணி. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வந்த இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் 417 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சத்தீஸ்கர் 181ரன்களுக்கு சுருண்டது. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் 70.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 518 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சத்தீஸ்கர் அணி நேற்றைய கடைசி நாள்...

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

0
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ராஜ் குமார்...

தெற்காசிய தடகளம்: இந்திய வீராங்கனை சாதனை

4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2-வது இடத்தை இலங்கையின் டி.கே. திமேஷியும், 3-வது இடத்தை வி.பி. நேத்ரா சமாதியும் பிடித்தனர். ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி (19.19 மீட்டர்) முதலிடத்தையும், அனுராக் .சிங் காலேர் (18.91 மீட்டர்) 2-வது இடத்தையும், 3-வது...

இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்

0
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி சரிவில் இருந்து அணியை மீளச் செய்திருந்தார். பாகிஸ்தான் தொடரில் லிட்டன் தாஸுடன் கேப்டன் நஜ்முல்...

ஒற்றுமை சிலையில் விரிசல் என வதந்தி பரப்பியவர் மீது வழக்கு

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் விரிசல் என சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி மகராஜ் சிலை சமீபத்தில் உடைந்து விழுந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் (ஒற்றுமை சிலை) விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எந்நேரமும் கீழே விழலாம் என ஒருவர் எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்....

கஸ்டம்ஸ் அதிகாரி போல் நடித்து மும்பை மருத்துவரிடம் ரூ.26 லட்சம் மோசடி

மகாராஷ்டிராவின் நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் கஸ்டம்ஸ் அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் போலீஸ் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன் மருத்துவருக்கு தொடர்பு இருப்ப தாக புகாரில் தெரிவிக்க உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...