Home 2024
Yearly Archives: 2024
ராகுல் காந்தி சர்ச்சை கருத்து: சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. குறிப்பாக சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது என கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “ராகுல் கருத்து மோசமானது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி ஆபத்தான கதைகளை பரப்பி வருகிறார்” என்றார். இந்நிலையில், பாஜக ஆதரவு பெற்ற சீக்கிய குழுவினர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள்தலைவர் சோனியா...
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை புல்டோசர் மூலம் அழிக்க விடாமல் பாட்டில்களை அள்ளிய பொதுமக்கள்: வீடியோ வைரல்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டி, புல்டோசர் மூலம் அழிக்க முயன்றபோது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது ஆந்திராவில் வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான பாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபானபாட்டில்களையும் கலால் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இவைகளை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சாலையில் கொட்டி அழிப்பது...
பாரதியார் நினைவு நாள் | ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை: பாரதியார் சங்கம் சார்பில் பாரதி சுடர் விருது
பாரதியார் நினைவு நாள் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள பாரதியார்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.பாரதியார் சங்கம், சென்னைபாரதிய வித்யா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விஜிபி...
வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்துள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப் பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரிக்கிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும்.வருவாயை மட்டுமே முதன்மை...
மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் இணைய விளையாட்டுகள்; கண்காணிப்பது அவசியம்: தலைமை செயலர் அறிவுறுத்தல்
உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. அவர்களை பெற்றோர்,ஆசிரியர்கள் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றுதலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. முகாமைதலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதி, அதை தடுக்கும் வகையில், நாட்டில் முதல்முறையாக தமிழக அரசு சட்டம்...
காசநோய் பாதிப்பில் 85% பேர் குணமாகின்றனர்: சுகாதார துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல்
இந்தியாவில் பல மாநிலங்களில் காசநோய் பாதிப்பு சவாலாக உள்ள நிலையில், தமிழகத்தில் காசநோய் பாதிப்பில் இருந்து 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காசநோயால் பாதிக்கப்படுவோரில் 49.01 சதவீதம் அரசு மருத்துவ மனைகளிலும், 49.75...
ஆட்டு தீவனமானது குழந்தைகளுக்கான சத்துமாவு – நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அறியாமை காரணமாக சரிவிகித உணவை குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இல்லை. இதனால் ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், போதிய வளர்ச்சி இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 விதிகளின்படி, 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும்பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துணவு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 449 குழந்தை...
காந்தி சிலை உடைப்பு: எம்எல்ஏ தலைமையில் காங்கிரசார் மறியல்
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 1995ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரதாஸ் என்பவரால் காந்தியடிகள் உருவ சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலை மற்றும் அந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் போன்றவை சமூக விரோதிகளால் சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சம்மந்தமாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.,11) மாலை சிலை உடைக்கப்பட்ட இடத்திற்கு...
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி மேல்பாலை பள்ளி வெற்றி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இதில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நாகா்கோவில் எஸ். எல். பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ச. ராஜேஷ் தலைமையில், கைப்பந்து சங்க மாவட்டச் செயலா் வளா்அகிலன், வழக்குரைஞா் சிவராஜ் ஆகியோா் போட்டிகளை தொடக்கிவைத்தனா்.
இந்த போட்டிகளில் 25 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மேல்பாலை புனிதமேரி...
பைக்கில் மோதி நிற்காமல் சென்ற கார்; 2 பேர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் முபின் (24). கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரியை நுள்ளி விளை பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.
நேற்று (செப்.,11) சகோதரியை பார்ப்பதற்காக முபின் மற்றும் அவரது தம்பி உறவு முறையான 15 வயது சிறுவன் ஆகியோர் பைக்கில் வந்துள்ளனர். பின்னர் மாலையில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை முபின் ஓட்டினார்.
களியங்காடு - இறச்சகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே செல்லும்போது, எதிரே தாறுமாறாக...














