Google search engine
Home 2024

Yearly Archives: 2024

60 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளவிளை சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாகவசித்துவருகிறார். நேற்று முன்தினம் (செப்.,10) இரவு மணிகண்டன் உழவர்கோணம் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் பழைய இரும்பு பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி...

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது: மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கருத்து

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்கொலை அதிகமாக நடைபெறுகிறது என்று மனநல மருத்து வரும் சினேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் கூறினார். உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்.10-ம் தேதி (நேற்று) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சினேகா அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் தற்கொலைத் தடுப்புக்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு சாரா நிறுவனங்களையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி...

தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணிச்...

தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்துக்கு காலவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சங்க பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்-2023-ல் தமிழக அரசு பல்வேறு திருத்தங்களை கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்துள்ளது. அதில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் என்பது குறி்ப்பிட்ட காலத்துக்கு மட்டும் எனக்கூறி காலவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளுக்கான சட்டத்தில் இல்லாத விதிகளை தமிழக...

கல்வித்தரத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக, மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளின் கல்வித்திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.551.41 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, ரூ.436.74 கோடியில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் காலை உணவுத்திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில்...

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு உரிய நிதி வழங்கப்படும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கிவைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதிபிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்...

நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.10) மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தொடங்க இருக்கிற வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

3. 40 லட்சம் குழந்தைகள் பயன்: குமரி கலெக்டர் தகவல்

'நிறைந்தது மனம்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளை கலெக்டர் அழகு மீனா நேரில் சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் 110-ன் விதிப்படி “ஊட்டச் சத்தை உறுதி செய்" எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. அதன் அடிப்படையில் குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் 9, 011 கர்ப்பிணி தாய்மார்களும், 7, 984 பாலூட்டும் தாய்மார்களும், 57 ஆயிரத்து 786 இணை...

கிருஷ்ணன்கோவில் குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்து வருகின்றனர். இதனால் இந்தக் குளம் அசுத்தமடைந்து மோசமான நிலையில் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறி உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி குளத்துக்கு நல்ல தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா வரும் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. 1 ஆம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும், 15ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய வெண் பட்டும், 16ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும் அம்மனுக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்க இருக்கிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...