Home 2024
Yearly Archives: 2024
குமரி: ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற 4 பேருக்கு குண்டாஸ்
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் மரியடேவிட் (56) ஆட்டோ டிரைவர். கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி இரவு காப்புக் காடு சந்திப்பு பகுதியில் வைத்து ஐரேனிபுரம் பகுதி நிர்மல் (26) என்பவருக்கும் மரியடேவிட்டுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதுக்கடை பகுதியில் உள்ள நெடுமானி குளம் பகுதியில் வைத்து நிர்மல், ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த பென்னிட்டாப் (36), நட்டாலம் பகுதி காட்வின் ஜாண் ராஜ் (29), தேங்காப்பட்டணம் பகுதி பரமசிவன் (36), ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த...
குமரியில் மாற்றுதிறானாளி போல் நடிக்கும் யாசகர்
குமரி கடற்கரையில் மாற்றுதிறனாளியாக நடித்து யாசகம் பெற்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் வாலிபர் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்த நிலையில் யாசகம் பெற்று கொண்டிருந்தார், அப்போது ஒரு நபர் அவருக்கு பணம் கொடுத்துவிட்டு சென்றார், பின்னர் ஊனம் என நினைத்த இந்த வாலிபர் திடீரென தனது சட்டையில் மறைத்து வைத்த இரு கைகளை நீட்டி பணத்தை எடுத்த வீடியோ வைரலாகி உள்ளது.
4 ஆண்டுகளில் 532 நாள் விடுமுறை எடுத்த பைடன்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலக முன்னாள் பொது ஆலோசகர் மார்க் பாலெட்டா கூறியுள்ளதாவது:
ஜோ பைடன் பதவியேற்றது முதல் 957 நாட்களில் 40 சதவீதத்தை தனிப்பட்ட தனது இரவு பயணங்களுக்காக செலவிட்டதாக நியூயார் போஸ்ட் ஊடகத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, எல்லை பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மை உள்ளிட்ட எந்த கவலையும் பைடனுக்கு கிடையாது. அதனால்தான் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை 4 ஆண்டுகளில் கழித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் தனது அதிபர் பதவி காலத்தில் 26 சதவீதத்தை மட்டுமே...
பாலியல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் பாதிரியார் கைது: 74 ஏக்கரை 2 ஆயிரம் போலீஸார் சுற்றிவளைத்து நடவடிக்கை
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டின்பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலாயை, ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரில் உள்ளது ‘தி கிங்டம் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட்’ தேவாலயம். 74 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி மற்றும் ஆடிட்டோரியத்துடன் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாதிரியாராக இருப்பவர் அப்போலோ குயிபோலாய். இந்ததேவாலயத்துக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், இவரின்தீவிர ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். இவர் தன்னை இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்றும் தனது ஆதரவாளர்களிடம்...
ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வென்ற இலங்கை!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது.62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. இலங்கை அணிக்காக லஹிரு குமாரா 4...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜன்னிக் சின்னர்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில்...
அக்.19-ல் தமிழ் தலைவாஸ் – தெலுகு டைட்டன்ஸ் மோதல்
புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அக்டோபர் 18-ல் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி மோதுகின்றன.
12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாட உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில்...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை தோற்கடித்தது இந்தியா
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சுக்ஜீத் சிங் இரு கோல்களையும் (2-வது மற்றும் 60-வது...
பாஜக அலுவலகத்தை குறிவைத்த தீவிரவாதிகள்: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள், முதலில் பாஜக அலுவலகத்தை குறிவைத்தனர் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை தரப்பு வழக்கறிஞர் பிரசன்ன குமார் நேற்று பெங்களூருவில்...
டெல்லியில் அரசு பொறியாளர் வீட்டில் ரூ.2.39 கோடி பறிமுதல்
டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி பொறியாளரின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2.39 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டியில் சுற்றுச்சூழல் முதுநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் முகம்மது ஆரிப். இவர் ரூ.91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகங்களில் சிபிஐசோதனை நடத்தியது. இதில் ரூ.2.39 கோடி ரொக்கமும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் முகம்மது ஆரிப் மட்டுமின்றி லஞ்ச பணத்தை கொண்டு சேர்த்த கிஷ்லாய சரண்சிங்,இடைத்தரகர் பகவத் சரண்...














