Home 2024
Yearly Archives: 2024
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலத்தை அபகரித்த மாபியா கும்பல்: அமலாக்கத் துறை கண்டுபிடிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம்மாபியா கும்பல் அபகரித்துள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.3,000 கோடி எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோட்டா நாக்பூர் குத்தகை (சிஎன்டி) சட்டத்தின் கீழ், வனப்பகுதி நிலங்கள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் விற்க முடியாத பிரிவின் கீழ் உள்ளன. ஆனால், இந்த நிலங்களை எல்லாம் மாபியா கும்பல் அபகரித்துவிட்டதாக அமலாக்கத்துறைக்கு பல புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த நில ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. போலி ஆவணங்கள் மூலம், மொத்தம்...
இந்தியாவின் புகழை கெடுக்க ராகுல் வெளிநாடு செல்கிறார்: மத்திய அமைச்சர் விமர்சனம்
பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முற்காலத்துக்கு செல்லும் தொழில்நுட்பம் ஏதேனும் இருக்குமானால் ராகுல் காந்தி தனது பாட்டியிடம் சென்று ஆர்எஸ்எஸ் பங்கு பற்றி கேட்டறிய வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பற்றி அறிய ராகுல் பல பிறவிகள் எடுக்க வேண்டும். ஒரு துரோகியால் ஆர்எஸ்எஸ் பற்றி அறிந்துகொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ்ஸை அறிய முடியாது. இந்தியாவின் புகழை கெடுக்கவே ராகுல் வெளிநாடு செல்வதாக தோன்றுகிறது. ஆர்எஸ்எஸ், இந்தியாவின் விழுமியங்கள் மற்றும் கலாச்சாரத்தில் இருந்து பிறந்தது.யுவராஜ்...
ஹரியானா தேர்தல்: 20 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேர வைக்கு அக்.5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.
இது தொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கூட்டணி தொடர்பாக இதுவரை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் 20 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள 12 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஹரியானா மாநில ஆம் ஆத்மி...
இமானுவேல் சேகரன் நினைவுநாள் நாளை அனுசரிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,000 போலீஸார் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜி.க்கள், 19 எஸ்.பி.க்கள், 61 டிஎஸ்பி.க்கள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்...
விக்கிரவாண்டி மாநாட்டு ஏற்பாடுகள்: கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், விஜய்யின் கட்சியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையே, கட்சியின்முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த விஜய் முனைப்பு காட்டி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன்...
தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும்: முதல்வர் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை....
தமிழக கனிமவள துறையில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு: சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்த கோரிக்கை
தமிழகத்தில் கனிமவளத் துறையில் பலகோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த மோசடியை தடுக்க மாநில அளவில் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என துறை அலுவலர்களே கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனிமவளத் துறையில் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைப் போல், மாநில அளவில் பல கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்துள்ளதை தடுக்க சிறப்புக் குழு அமைப்பது குறித்து, இத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இயங்கிவரும் கனிமவளத் துறையில், ‘மாவட்ட மினரல் பவுண்டேஷன்’ மூலம் தற்காலிக...
திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல அரசின் தூதுவராக பெண்கள் இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி
அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல அரசின் தூதுவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமைவகித்தனர்.இவ்விழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது: அரசு விழாவில் பல்வேறு துறைகள்...
கருங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திமுக நிர்வாகிகள்
கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் கிளீட்டஸ் (49) அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (36). இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் போது பிரபு என்பவர் கிளிட்டசிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அதன் பிறகு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளி நாட்டில் இருந்து இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். பணம் கேட்ட ஆத்திரத்தில் கடந்த 1-ம் தேதி கிளிட்டஸ் மற்றும் அவரது மனைவி இருவரையும் வீடு புகுந்து பிரபு...
அருமனை: பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு வாலிபருக்கு வலை
அருமனை அருகே உள்ள முள்ளபழஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (70). இவர் நேற்று(செப்.9) மேல்புறம் பகுதியில் இருந்து மருதங்கோடு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக குமரேசன் மீது மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் அருமனை போலீசார் சம்பவ இடம் சென்று பலியான குமரேசனின் உடலை மீட்டு குழித்துறை அரசு...














