Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கிள்ளியூர் ஒன்றிய திமுக கூட்டம்; அமைச்சர் பங்கேற்றார்

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில்பாரக்கன்விளையில் நடந்தது. கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும், கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய பகுதியான தொலையா வட்டத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர்...

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை: சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில்...

தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியதால் மத்திய இணை அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புபடுத்தி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது கருத்துக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும்...

பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

 தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.எதிர்காலச்...

அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார்....

முடக்கப்பட்ட தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்; அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 7-ஆம் நாள் நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளாக (International Day of Clean Air for blue...

தெங்கம்புதூர்: விவசாயியை கத்தியால் குத்தியவர் கைது

தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வபெருமாள் ( 64 )விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (49) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவதன்று பணிக்கன்குடியிருப்பு பகுதியில் செல்வ பெருமாள் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அவரை சுயம்புலிங்கம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வபெருமாளை குத்தினார். பின்னர் சுயம்புலிங்கம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக...

நித்திரவிளை:  அரசுபஸ் கல் வீசி உடைப்பு – போலீஸ் விசாரணை

கொல்லங்கோட்டில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று(செப்.5) மாலையில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் வாவறை என்ற பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்ற ஒரு மர்ம நபர் பஸ்மீது கல் வீசினார். இதில் பஸ்ஸின் இடது பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. பஸ்ஸை டிரைவர் நிறுத்தி பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். பஸ்ஸின் கண்ணாடி உடைந்த பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இது சம்பந்தமாக டிரைவர் ஜான்ரோஸ் என்பர் நித்திரவிளை போலீசருக்கு தகவல்...

கண் லென்ஸ் பொருத்தும் முகாம் ஆரம்பம்- ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ”கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவை தோவாளை ஊராட்சி ஒன்றியம் 9ம் தேதி, மேல்புறத்தில் 12ம் தேதி, குருந்தன் கோட்டில் 18ம் தேதி, முன்சிறையில் 20ம் தேதி, கிள்ளியூரில் 23ம் தேதி, ராஜாக்கமங்கலத்தில் 25ம் தேதி, தக்கலையில் 26ம் தேதி, திருவட்டாரில் 27ம் தேதி, மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் 28ம் தேதியும் நடக்கிறது.

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி

அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 60). இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.   இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. ஜான்சனுக்கு மது பழக்கம் உள்ளதாகவும்,  அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   இந்த நிலையில் நேற்று (செப்.5) காலையில் ஜான்சன் வழக்கம்போல் ரப்பர் பால் வெட்ட தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...