தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வபெருமாள் ( 64 )விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (49) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவதன்று பணிக்கன்குடியிருப்பு பகுதியில் செல்வ பெருமாள் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அவரை சுயம்புலிங்கம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வபெருமாளை குத்தினார்.
பின்னர் சுயம்புலிங்கம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுயம்புலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுயம்புலிங்கம் தலைமறைவானார்.
இந்த நிலையில் தனிப் படை போலீசார் சுயம்புலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் சுயம்புலிங்கத்தை சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சுசீந்திரம் போலீசார் விவரித்து வருகின்றனர்.