‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளை கலெக்டர் அழகு மீனா நேரில் சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் 110-ன் விதிப்படி “ஊட்டச் சத்தை உறுதி செய்” எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் 9, 011 கர்ப்பிணி தாய்மார்களும், 7, 984 பாலூட்டும் தாய்மார்களும், 57 ஆயிரத்து 786 இணை உணவு பயனாளிகளும், 16 ஆயிரத்து 614 1-2 வயது முட்டை பயனாளிகளும், 21 ஆயிரத்து 285 முன்பருவ கல்வி பயனாளிகள் என மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 680 பயனாளிகளும், 2023-24-ம் ஆண்டில் 8, 647 கர்ப்பிணி தாய்மார் களும், 7, 678 பாலூட்டும் தாய்மார்களும், 49 ஆயிரத்து 295 இணை உணவு பயனாளிகளும், 18 ஆயிரத்து 558 1-2 வயது முட்டை பயனாளிகளும், 21 ஆயிரத்து 244 முன்பருவ கல்வி பயனாளிகள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 422 பயனாளிகள் என ஆக மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 621 பயனாளிகள் பயனடைந்து ஊட்டச்சத்தினை உறுதி செய்துள்ளனர்.